உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

என்று கூறுவார்கள். இந்த ஆனாபானஸ்மிருதி செய்வதினாலே பிக்ஷுவானவர் சமாதி நிலையையடைகிறார். இந்தச் சமாதி நிலை நான்கு வகைப்படும். அவை ஸோதாபத்தி நிலை, ஸகதாகாமி நிலை, அநாகாமி நிலை, அர்ஹத நிலை என்பன.

ஸோதாபத்தி நிலையை யடைந்தவர் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களை நீக்கியவர் ஆவார்.

கைதாகாமி நிலைய யடைந்தவர் ஒரே ஒரு பிறப்பை உடையவர் ஆவார்.

அநாகாமி நிலையை யடைந்தவர் இனிப் பிறவாத நிலையை அடைந்தவர் ஆவார்.

அர்ஹத நிலையை ய யடைந்தவர் இந்தப் பிறப்பிலேயே நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றவர் ஆவார்.

இதுவே தேரவாத பௌத்த சமயத்தின் தத்துவம் ஆகும். சுருக்க மாகக் கூறப்பட்ட இந்தத் தத்துவத்தை விரிவாக அறிய விரும்புவோர், மணிமேகலை 30-ஆவது காதையில் விரிவாகக் காணலாம்.