உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

39

பட்டார். தமது மகன் வெற்றி பெற்றதைக் கண்டு சுத்தோதன அரசர் அடங்காத மகிழ்ச்சி கொண்டார்.

அப்போது யாசோதரை குமாரியின் தந்தையான மகாநாமர் சொன்னார்: “சித்தார்த்த குமாரனைப் படைக்கலப் பயிற்சியறியாதவர் என்று எண்ணியிருந்தேன். இப்போது, அவர் முதல்தரமான வீரர் என்பதை நேரில் கண்டேன். வெற்றிபெற்ற குமாரருக்கு என் மகள் யசோதரையை மணம் செய்து கொடுக்க இசைகிறேன்” இவ்வாறு மகாநாமர் கூறியதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சியாரவாரம் செய்தார்கள்.

குறிப்பிடப்பட்ட நல்ல நாளிலே சித்தார்த்த குமாரனுக்கும் யசோதரையாருக்கும் திருமணம் இனிது நடந்தது. சித்தார்த்த குமாரன் பலவிதமான நகைகளையும் அணிகலன்களையும் மணமகளுக்குப் பரிசு அளித்தார். யசோதரைகுமாரி, ஆடல்பாடல்களில் தேர்ந்த ஐந்நூறு பணிப்பெண்களுடன் அரண்மனைக்கு வந்தார்.

தேவேந்திர மாளிகை போன்ற அரண்மனையிலே சித்தார்த்த குமாரனும் யசோதரை குமாரியும் எல்லா வித இன்ப சுகங்களைத் துய்த்து இந்திரனும் சசிதேவியும் போல வாழ்ந்தார்கள்.

சுத்தோதன அரசர், சித்தார்த்த குமாரனின் இல்வாழ்க்கையில் பெரிதும் கருத்தாக இருந்தார். சித்தார்த்த குமாரன் துறவு பூண்டு புத்த பதவியடைவார் என்று அசித முனிவர் சொல்லிய வாய் மொழி அரசருடைய மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. குமாரனை இல் வாழ்க்கையிலேயே இருக்கச் செய்து சக்கரவர்த்திப் பதவியைப் பெறச் செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆகவே, இல்லறத்தில் விருப்புக் கொள்ளும் படியான சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொடுத்தார். ஆடல், பாடல், இன்னிசை, குழல், யாழ், முழவு முதலிய கலைகளில் வல்லவரான அழகுள்ள இளமங்கையர் எப்போதும் குமாரனைச் சூழ்ந்திருந்து அவருக்கு மகிழ்ச்சியை யூட்டிக் கொண்டிருக்க ஏற்பாடு செய்தார். அரண்மனையைச் சூழ்ந்து கால் காத தூரம் வரையில் சேவகர்களை நியமித்துக் கிழவர் துறவிகள் நோயாளிகள் பிணங்கள் முதலிய அருவெறுப்பைத் தரும் காட்சிகள் குமாரன் பார்வையில் படாதபடி காவல் வைத்தார். மேலும் அரண் மனையைவிட்டு வெளியில் வராதபடி எல்லாவற்றையும் மாளிகையி லேயே அமைத்துக் கொடுத்தார். இவ்வாறு, குமாரன் இல்வாழ்க்கையி