உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

லேயே நிலைத்து நிற்கும்படிப் பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்து வைத்தார்.

விம்பசாரனின் அச்சம்

அக்காலத்திலேயே சாக்கிய ஜனபதத்துக்குத் தெற்கே யிருந்த மகத தேசத்திலே சிரேணிக குலத்தில் பிறந்த விம்பசாரன் என்னும் அரசன் அரசாண்டு கொண்டிருந்தான். விம்பசாரன், வேறு அரசர் யாரேனும் வந்து தன்னை வென்று தனது அரசாட்சியைக் கவர்ந்து கொள்வரோ என்று அச்சங்கொண்டிருந்தான். ஆகவே, அடிக்கடி அமைச்சர்களுடன் கலந்து இதுபற்றி ஆலோசிப்பது வழக்கம். வழக்கம் போல ஒரு சமயம் அமைச்சர் களுடன் ஆலோசனை செய்தான். “அறிவு மிக்க அமைச்சர்களே! நம்மை வெல்லக்கூடிய ஆற்றல் உடைய வேற்றரசர் யாரேனும் உளரோ? இருந்தால் அவர்களை எவ்வாறு வெல்வது? என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்” என்று கூறினான்.

அமைச்சர்கள், ஒற்றறிந்துவர பல நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள். ஒற்றர்கள் நாடெங்கும் சென்றுஆராய்ந்தனர். விம்பசார அரசனை வெல்லும் ஆற்றல் உள்ள அரசர் ஒருவரும் இலர் என்பதைக் கண்டனர். ஆனால், வடக்கே சென்ற ஒற்றர்கள் இந்தச் செய்தியை அறிந்தார்கள் : இமயமலைச் சாரலில் சாக்கிய ஜனபதத்தில் கபிலவத்து நகரத்தில் சுத்தோதன அரசருக்கு ஒரு குமாரன் பிறந்திருப் பதையும் அக் குமாரனின் திருமேனியிலே முப்பத்திரண்டு மகா புருஷ லக்ஷணங்கள் அமைந்திருப்பதையும் இக் குமாரன் இல்லற வாழ்க்கை யில் இருந்தால் அரசர்களை வென்று சக்கரவர்த்தியாக விளங்குவார் என்றும், துறவறம் மேற் கொண்டால் பெறுதற்கரிய புத்த பதவியை அடைவார் என்றும் நிமித்திகர் கணித்துக் கூறி யிருப்பதையும் ஒற்றர்கள் அறிந்தார்கள். உடனே, மகத நாட்டிற்கு விரைந்துவந்து இச் செய்திகளை அமைச்சர்களுக்குக் கூறினார்கள்.

அமைச்சர்கள் விம்பசார அரசனுக்கு இச்செய்திகளைத் தெரிவித்து உடனே நால்வகைச் சேனைகளைப் பலப்படுத்தும்படியும் சக்கரவர்த்தியாகப் போகிற சிறுவனை விரைவில் அழிக்கவேண்டும் என்றும் யோசனை கூறினார்கள்.

விம்பசார அரசன் இதைப்பற்றி நெடுநேரம் யோசித்தான். கடைசியில் அமைச்சரிடம் இவ்வாறு கூறினான்: சித்தார்த்த குமாரன்