உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

/61

அன்புடன் வரவேற்று, வந்த சேதியைக் கேட்டார். அவர்கள் சுத்தோதன அரசர் அடைந்துள்ள துயரத்தைக் கூறி நாட்டுக்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள். “அரசர் உம்மை உயிர்போல நேசிக்கிறார் என்பது உமக்குத் தெரியும். குமாரன் துறவு பூண்டு வெளிப்பட்டதைக் கேட்டது முதல் தீராத் துயரமடைந்து குற்றுயிராகக் கிடக்கிறார். குமாரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்க அவர் அவாகொண்டிருக்கிறார். குமாரன் இச் சிறுவயதில் துறவு கொள்ள வேண்டியதில்லை; பட்டாபி ஷேகம் செய்துகொண்டு சிலகாலம் செங்கோல் செலுத்தி மக்களுக்கு நன்மை செய்தபிறகு துறவு

கொள்ளலாம்.

66

இதற்கு முன்பும் சில அரசர்கள் துறவுபூண்டு, பிறகு திரும்பி வந்து அரசாண்டிருக்கிறார்கள். முற்காலத்திலே அம்பரீஷ மகாராசன் அரசாட்சியை வெறுத்துக் காட்டுக்குச் சென்றார். பிறகு, அவருடைய அமைச்சர் நாட்டு மக்கள் முதலியோரின் வேண்டுகோளுக்கு இணங்கித் திரும்பிச் சென்று அரசாட்சியை நடாத்தினார். மனிதரின் கொடுஞ் செயல்களை வெறுத்த இராமராசன் என்னும் அரசர் காட்டுக்குச் சென்று வாழ்ந்திருந்தார். பிறகு திரும்பிவந்து அரசாட்சியை நடாத்தினார். வைசாலி நாட்டுத் துரூமராசனும் துறவு பூண்டு, பிறகு திரும்பிவந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு நன்மை செய்தார். துறவு பூண்டு காட்டுக்குச் சென்ற ரிஷி ராச சக்கரவர்த்தி என்பவரும், இருக்கு தேவராசரும், தர்மாசய ராசனும் திரும்பிவந்து சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தி அரசாண்டார்கள்.

66

"குமாரனாகிய தாங்கள் இச் சிறு வயதில் துறவு கொள்வது தகாது. அருள் கூர்ந்து திரும்பிவந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு செங்கோல் நடத்திச் சில காலஞ் சென்ற பிறகு துறவு கொள்ளுங்கள்” என்று கூறி அமைச்சர்கள் அவரை வேண்டினார்கள்.

அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட போதிசத்துவர் அவர் களுக்கு இவ்வாறு கூறினார்: "அறிவுசான்ற அமைச்சர்களே! நீங்கள் கூறியது உண்மையே. எனது தந்தை என்னை எவ்வாறு நேசிக்கிறார் என்பதும் என் பிரிவு அவருக்கு எவ்வளவு துன் பத்தைத் தரும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நான் துறவு பூண்டது, நானும் மற்றவர்களும் சாந்தி நிலையை யடையும் வழியைக் கண்டுபிடித்தற்கே யாகும். அந்த வழியைக் கண்டறியாமல் நான் திரும்பி வரமாட்டேன். எனக்கு அரசப் பதவி வேண்டியதில்லை.