பக்கம்:மருதநில மங்கை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை113


கையாறு உடையவர் இல்அல்லால் செல்லல்;
அமைந்தது இனி நின் தொழில்.” 35

பூத்தேளிர் கோட்டம் வழிபடச் சேடியரோடு சென்ற மகன், கணவன் காதலிக்கும் பரத்தையர் இல்லிற்குச் சென்று வந்தமை அறிந்த தாய் அவனைச் சினந்து கூறியது இது.

1. ஞாலம்–உலகம்; வறம்தீர–வறுமை நீங்க; குணக்கு–கிழக்கு; 2. கொண்மூ–மேகம்; 3. தவநெடிது ஆயினை–மிகவும்– நீட்டித்தாய்; 4. புத்தேளிர் கோட்டம் – கோயில்; 6. மேயாயே போல–விரும்பினவள் போல்; 10. மடக்குறுமாக்கள்–மடப்பம் பொருந்திய இளமகளிர்; 13. தொடக்கத்துத் தாய்–தந்தையின் முதற் காதலி; 16. மயங்குநோய்–காதலால் மயங்கும் நோய்; 17. முயங்கினள்–தழுவினள்; 23, தலைக்கொண்டு–நம்மோடு மாறுபாடு கொண்டு; காயும்–சினக்கும்; 24. புலத்தகை–புலக்கும் இயல்புடைய; புத்தேள்–புதியாள்; 29. சிறுகண்ணும்–சிறிய இடமும்; உட்காள்– அஞ்சாது. 32. துன்னுதல் – நெருங்குதல்; 33. ஐயம் இல்லாதவர்–காதலன் வருவானோ வாரானோ எனும் ஐயம் கொள்ளாது வருவான் என உறுதியாக நம்பும் பரத்தையர்; 34. கையாறு உடையவர்–காதலனை இழந்து துன்புறுவார்; 35. அமைந்தது முடிந்தது.

மருதம்–8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/115&oldid=1129891" இலிருந்து மீள்விக்கப்பட்டது