பக்கம்:மருதநில மங்கை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18


வெந்த புண்ணில் வேல்

ரண்போல் பெரிய மனை. அளந்து காண மாட்டாப் பெருஞ்செல்வம். வருவார்க்கு வாரி வாரி வழங்கவும் வற்றாத பெரிய சோற்று மலை. இன்பத்தின் ஊற்று என விளங்கும் ஓர் இளமகன். வளமும் வனப்பும் மிக்க இவ்வாழ்வு வாய்க்கப் பெற்றும் வருந்திக் கிடந்தாள் ஒருத்தி, அவள் கணவன், அவளோடு அவ்வீட்டில் வாழும் விருப்பம் இலனாய்ப் பரத்தை ஒருத்திபால் ஆசை கொண்டு, அவளோடு அவள் மனையில் வாழ்ந்திருந்தான். அதனால் மனம் நொந்த அவன் மனைவி, தன் மகன் முகம் காணும் மகிழ்ச்சியால் ஒருவாறு உயிர் தாங்கி யிருந்தாள்.

ஒருநாள் மாலை, தன் மகனை நன்கு அலங்கரித்துச், சேடி ஒருத்திபால் அளித்து, “இவனோடும் தேர் ஏறிச் சென்று, ஊர்ப் பொது இடத்தே, இளஞ்சிறுவர்கள் ஆடுதற்கு என அமைந்துள்ள ஆடிடத்தே, இவனைச் சிறிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/116&oldid=1129777" இலிருந்து மீள்விக்கப்பட்டது