பக்கம்:மருதநில மங்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை115


பொழுது ஆடவிட்டு அழைத்து வருக!” எனப்பணித்துப் போக்கினாள். அவள் அவனை அழைத்துக் கொண்டு ஆடிடம் அடைந்தாள். ஆங்கு பரப்பிய புது மணலில் அவன் சிறிது பொழுது ஆடி மகிழ்ந்தான். சிறிது ஆண்டு முதிர்ந்த இளம் சிறுவர், பனங்காய்களைப் பறித்துக் கொணர்ந்து, அவற்றைக் கொடிகளை முறுக்கிப் பண்ணிய கயிற்றில் பிணைத்து, ஈர்த்து ஆடி மகிழ்ந்தனர். அதையும் கண்டு மகிழ்ந்தான் அவ்விளமகன், பொழுதும் மறைந்தது. மேலும் இருந்தால் தாய் சினப்பள் எனக் கருதி, அவனைத் தேரில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினாள் சேடி.

அவன் தேர் ஊர்ந்து செல்லும் காட்சியைச் சாளரத்தின் அகத்தே இருந்து காணும் அத் தெருவாழ் மக்கள், “ஆலமர் செல்வனின் இளைய மகனாம் முருக வேளுக்கு, ஊரார் விழா எடுக்கும் நாள் வந்துவிட்டதோ! விழாவின் முதல் நாள் அன்று அவன் உலாவரும் காட்சிதானோ இது!” எனக் கருதிக் களித்தனர். அவ்வாறு அவனைப் பார்த்து மகிழ்ந்தாருள் ஒரு பரத்தையும் இருந்தாள். அண்மையில் வந்த அவன் தேரைக் கண்ட அவள், அத் தேரில் இருப்போன் இன்னான் என்பதை அறிந்து கொண்டாள். அவன், தன் காதலன் ஈன்ற கான்முளை என்பதைக் கண்டு கொண்டவுடனே, தன் காலில் கட்டிய சிலம்பொலிக்க ஓடி, அவன் தேரை அடைந்தாள். அவள் வருகைகண்டு தேரும் நின்றது. அவள் அவனை எடுத்து அணைத்து முத்தம் கொண்டு, “என் செல்வ மகனே! உன் கண்ணழகைக் கண்டும், நெற்றியைத் துடைத்தும், கன்னத்தைக் கைகளால் தடவியும் களிக்கும் உன் தாய் முன், அவர் மனம் மகிழுமாறு, நீ உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/117&oldid=1129781" இலிருந்து மீள்விக்கப்பட்டது