பக்கம்:மருதநில மங்கை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20


வருகென்றார் யாரோ?

தெருவில் நடைதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான் ஓர் இளம் சிறுவன். விளையாட்டின் பால் கொண்ட விருப்ப மிகுதியால், பால் உண்ணும் நினைப்பையும் இழந்திருந்தான் அவன். காலம் அறிந்து பால் குடிக்கும் கருத்து அவனுக்கு இல்லையாயினும், அவன் தாய், அவன் பால் உண்ணும் காலம் இது என உணர்ந்து உண்பிக்கும் உயர்ந்த அன்புடையளாய் விளங்கினாள். மேலும், காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்ட கணவன், மகன் பிறந்த பின்னர், மனையற மாண்பை மறந்து, பரத்தையர் பின் திரியும் பழிநிறை வாழ்வுடையனானமையால், தன் உள்ளம் கொள்ளும் துயரை, அவள், தன் மகனைப் பேணி வளர்க்கும் பெரும்பணியால் ஒரு சிறிது மறந்து வாழ்ந்தாள். அதனால், அவள் அவனை, ஆடை. அணிகளால் அழகு செய்து ஆடவிடுப்பதும், அவன் விரும்பும் பால் உணவை, அவன் உண்ணும் காலம் அறிந்து, உவந்து உண்ணும் வகையில் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/129&oldid=1129814" இலிருந்து மீள்விக்கப்பட்டது