பக்கம்:மருதநில மங்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை11



தார்கொண்டாள் தலைக்கோதை தடுமாறிப் பூண்டநின் 15
ஈர்அணி சிதையாது எம்இல்வந்து நின்றதை,

தணந்ததன்தலையும், நீ தளர்இயல் அவரொடு
துணங்கையாய் எனவந்த கவ்வையின் கடப்பன்றோ,
ஒளிபூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்தநின்
களிதட்ப வந்த இக்கவின்கான இயைந்ததை. 20

என வாங்கு,
அளிபெற்றேம்; எம்மைநீ அருளினை; விளியாது
வேட்டோர் திறத்து விரும்பிய நின்பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம்; கடுந்திண்தேர்

பூட்டு விடாஅ நிறுத்து. 25

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத், தலைவி, அவன் பரத்தையை வதுவைமணம் கொண்டதும், அவளோடு புனலாடியதும், துணங்கை ஆடியதும் கூறி ஊடியது இது.

1. வீங்குநீர்–மிக்கநீர்; பகர்பவர்–விற்பவர்; வயற் கொண்ட ஓரங்கர்–வயலில் பறித்துக் கொண்ட பொழுது; 2. சூழ்தந்து– சூழ்ந்து வந்து; 3. கனைகடாம்–மிக்க மதநீர்; 4. ஆங்கவை–அம்மதநீரில் முன்னரே படிந்து உண்டு வாழும் வண்டுகள்; அல்கி–தங்கி; கங்குலான்–இரவு வந்துற்றதும்;5. வீங்குஇறை–மகிழ்ச்சிமிகுதியால் பருத்த முன்கை, வடுக்கொள-வடுவுண்டாமாறு; விழுநர்– விரும்பும் கணவர்; 6. தேம் கமழ்–தேன் மணக்கும்; கதுப்பு–கூந்தல்; 7. ஊதி–தேன் உண்டு; மரீஇய–வாழ்ந்த; 8. உள்ளா–நினையாத; 9. அமர்துணை–விரும்பும் பரத்தை; 10. மணமனையாய்–மணம் கமழும் மனையின் கண் உள்ளாய்; என–என்று ஊரார் அலர் உரைக்க, மல்லல்–மாண்பு (இகழ்ச்சிக்குறிப்பு) 11. பொதுக்கொண்ட –சிறப்பில்லாத; பூவணிப்பொலிந்த–பரத்தையின் மலர் மாலையைப் பெற்று மகிழ்ந்த; 12. வதுவை–திருமணம்; 13. கனலும்–வருத்தும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/13&oldid=1129362" இலிருந்து மீள்விக்கப்பட்டது