பக்கம்:மருதநில மங்கை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை149


மனைவியின் கொடிய கோபத்தைக் கண்ட அவன், அதைத் தன் சொல்லாற்றலால் தணிக்கத் துணிந்து, அவள் கேட்குமாறு, “ஆத்திரத்தில் அறிவு மழுங்கிப் போகும் என்று கூறுவர். இவ்வாறு அறிவு இழந்து கடுமையாக இருப்பவரைக் காரணம் காட்டித் தெளிவிப்பது இங்கு யாரால் ஆகும்?” என்று கூறினான்.

தான் செய்த தவறினுக்குச் சமாதானம் கூற வருகிறான் என்பதை அறிந்து கொண்ட அவள், அவனைப் பார்த்து, “ஏடா! நீ எங்கோ போக விரும்புகின்றாய். அதை விடுத்து, இங்கே நின்று, உண்மையற்ற பொய்யுரைகளை என்பால் உரையாதே. அதை, நீ கூறும் பொய்யை, உண்மையெனக் கொண்டு ஏமாறுவாரிடத்தே சென்று கூறு!” என்று கூறிச் சினந்தாள்.

அவள் கடிந்து கூறுவன கேட்ட அவன், “அழகிய அணிகளை ஆராய்ந்தணிந்து நிற்பவளே! உன்னை அடைந்து, உன் அருளைப் பெற்றாலல்லாது உயிர் வாழ மாட்டாப் பேரன்பு கொண்ட என்பால் தவறு என்ன கண்டாய்? அதை நான் அறியக் கூறு!” எனப் பணிந்து வேண்டினான்.

தவறும் செய்துவிட்டு, ஏதும் தவறு செய்யாதவன் போல் பேசும் அவன் செயல் அவளுக்கு ஆறாச்சினத்தை அளித்தது. அளிக்கவே, அவள் நேர் நின்று, “ஏடா! நீர் நிலைகளில், நண்டுகள் ஊர்ந்தமையால் உண்டான கால் வடுக்களைப் போல், உன் காதற் பரத்தையர் தம் பல்லாலும் நகத்தாலும், உன் மேனியில் பண்ணிய இவ் வடுக்களும், அவரோடு புணர்ந்த புணர்ச்சி: மிகுதியால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/151&oldid=1130023" இலிருந்து மீள்விக்கப்பட்டது