பக்கம்:மருதநில மங்கை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை157


மாணமறந்து உள்ளா, நாணிலிக்கு இப்போர்
புறம்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் எனநெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு.” 15

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனோடு, தலைவி ஊடல் தீர்ந்து கூறியது.

2. படிறு–கொடுமை; 3. வாரல்–வாராதே; வந்தாங்கேமாறு–வந்ததுபோல் மீண்டு செல்; 5, போர் எதிர்ந்தற்றா–போர் புரிந்தது போல; புலவல்–வெறுக்காதே; கூறின்என்–புலந்து கூறுவதால் யாது பயன்; 7. காயாதி–வருந்தாதே; எல்லாம்வல்–வஞ்சனை பலவும் வல்ல; 8. கொற்றி–கொற்றவை; நொடித்தல்–வருவது உரைத்தல் 11. இன்நகை–இனிய நகையினை உடையாய்; 12. மாண மறந்து–அடியோடு மறந்து; உள்ளா –நினைத்துப் பாராத; 13. புறம் சாய்ந்து–தோற்று; காண்டைப்பாய்–காண்பாய்; 14. நெருக்கின்– விடாது கோபித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/159&oldid=1130033" இலிருந்து மீள்விக்கப்பட்டது