பக்கம்:மருதநில மங்கை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156புலவர் கா. கோவிந்தன்


கணவன் நிலையைக் கண்டாள் மனைவி, எவ்வகையிலாவது அவன் தன்னைத் தெளிவித்து அடையத் துணியும் அவன் உறுதிப்பாட்டை உணர்ந்தாள். அதனால் அவனை ஏற்றுக்கொள்ள இசைந்தாள். இசைந்தவள் தன் நெஞ்சை நோக்கி, “நெஞ்சே! இவன் நம்மை அறவே மறந்தவன். பரத்தையர் பின் திரிந்து பழியொடு பட்ட வாழ்வு வாழ நாணாதவன் என்பதெல்லாம் உண்மை. ஆனால், அக் குற்றம் கண்டு, அவன் கூறும் பொய்யை ஏற்றுக்கொள்ளாது வெறுத்தால், இவன் பொய் கூறுவதை விடுத்து, “நான் பிழை செய்து விட்டேன். என் பிழை பொறுத்து ஏற்றுக் கொள்வாயாக!’ என வேண்டி நம் காலில் வீழ்ந்து பணியவும் துணிவன். அது நம் நிலைக்கு ஏலாது. ஆகவே ஊடற்போரில் தோற்று, இவனை ஏற்றுக் கொள்ளும் வழிகளைக் காண்பாயாக!” எனக் கூறி, ஊடல் தீர்ந்து உவந்தாள்.

“யார் இவன் எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்
ஊராண்மைக்கு ஒத்த படிறுடைத்து, எம்மனை
வாரல்நீ; வந்தாங்கே மாறு.

என்இவை? ஒருயிர்ப்புள்ளியின் இருதலையுள் ஒன்று போரெதிர்ந்தற்றாப் புலவல் நீ; கூறினென் 5
ஆருயிர் நிற்குமாறு யாது?

ஏஎ; தெளிந்தேம் யாம்; காயாதி, எல்லாம்வல் எல்லா!
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித்தாங்கு,
வருந்தல் நின்வஞ்சம் உரைத்து.

மருந்தின்று; மன்னவன் சீறில் தவறுண்டோ? நீ நயந்த 10
இன்னகை தீதோ இலேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/158&oldid=1130032" இலிருந்து மீள்விக்கப்பட்டது