பக்கம்:மருதநில மங்கை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை181


துனை–விரைந்து பறக்கும்; 30. மூசிய–மொய்ந்த; 31. காரிகை நல்லார்–அழகுடைய நல்ல மகளிர்; ஓராங்கு–ஒன்று சேர்ந்து; 33. செயல் அமை–வேலைப்பாடு மிக்க: கோதை– மலர் மாலை; நகை அணி, 34. தட்ப–மாட்டிக் கொள்ள 35, தெரி முத்தம்-ஆராய்ந்த முத்து, 35. அரி–அழகு; அவிர்–ஒளிவீசும்; ஆய்காது–அழகிய காது. வாங்க–மாட்டிக் கொள்ள 37. காழகம்–ஆடை; 38. அரிஆர்–பரல்கள் நிறைந்த; நெகிழம்–சிலம்பு; அணிசுறா– அழகிய சுறா போலும் வடிவம்; 39. அலவுற்று வருந்தி; 42. கலிங்கம்–ஆடை; 43. பூ வேட்ந்த – பூக்கள் நிறைந்த; 44. கடிகயம்–காவல் அமைந்த குளம்; அலந்து–அலவுற்று; 45. கணம் கொண்டு–கூட்டமாய் வந்து; கையாற்றாள்–கையால் ஓட்டமாட்டாள்; 46. பரிபு–அறுத்து; வங்கம்–ஓடம்; 48. இறந்த – அளவிற்கு மீறிய; களியாள்–கள்ளுண்ட வெறியால்; 49. கடிவாள் –ஓட்டுவாள்; 50. தேற்றாள் அறியாள்; 51. காவில்–சோலையில்; கால்ஒற்ற–காற்றுவீச; ஒல்கி– தளர்ந்து; ஒசியா–வளைந்து; 53. இரிவுற்றார் நாற்புறமும் சிதறி ஓடினார்; 54. வண்டலவர்–மகளிர். வண்டலவர்; வண்டிற்கு இரிவுற்றார் என மாற்றுக; 57. கனவின் தலையிட்டு – கனவின் மேலேற்றி; 60. வாயா – உண்மை ஆகுமாறு; காண்டை –வழிச்செய்வாய்; 64. ஆனாதுஓயாது; மேவர்–பொருத்தமாக; 66. தேன் இமிர்–தேனீக்கள் ஒலிக் கும்; ஆடுமார்–விளையாடற் பொருட்டு; 67. ஆனா – குறையாத; அணிஅயர்ப்–அணிகளை அணிவர்; 68. வேனில்விருந்து வேனில் விழா; எதிர் கொண்டு – எதிர் நோக்கி; விருந்து எதிர் கொண்டு அணி அயர்ப என மாற்றுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/183&oldid=1130146" இலிருந்து மீள்விக்கப்பட்டது