பக்கம்:மருதநில மங்கை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180புலவர் கா. கோவிந்தன்


செய்வது இல் என்பதோ கூறு. பொய்கூறேன்; அன்னவகையால் யான்கண்ட கனவுதான்

நன்வாயாக் காண்டை; நறுநுதால்! பன்மாணும் 60 கூடிப்புணர்ந்தீர்! பிரியன்மின்! நீடிப் பிரிந்தீர்! புணர்தம்மின் என்பனபோல அரும்பு அவிழ் பூஞ்சினைதோறும் இருங்குயில் ஆனாது அகவும் பொழுதினான், மேவர

நான்மாடக்கூடல் மகளிரும், மைந்தரும் 65 தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார் ஆனாவிருப்போடு அணி அயர்ப; காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தலைவியின் ஊடல் தீர்வது குறித்து, தெய்வ மகளிர் ஆடி மகிழும் கனாக் கண்டு களித்தேன் எனக் கூறியது இது.

1. புனவளர்–பூஞ்சோலையில் வளரும். கழியக்கனவு–நல்ல கனவு; பெருங்கனவு 2. காரிகை நீர்த்து–அழகுடைத்து; 3. முயங்கிய புணர்ந்த; 5. உயங்கி- செயலற்று; 7, ஒருதலை–உறுதியாய்; வீழ்வார்–விரும்புவாரை; 9. தகையாது–விலக்காது; ஆல்–அசை; 10. அல்கல்–இரவு; 11. கலிகெழு–ஆரவாரம்மிக்க; 12. வரைஉறழ்–மலைபோன்ற; 14. தண்டா –குறையாத; தீம்–இனிய; 16. அவ்விசும்பு–அழகிய ஆகாயம்; 17, மாஇனம்–அன்னப்பறவையின் கூட்டம்; 19. இறைகொண்டு தங்கி; 20. ஒன்றி நிறைவதை–ஒன்று சேர்ந்து இருத்தலை; ஒன்றி நிறைவதைக் கண்டேன் என மாற்றுக; 21. ஓர்த்தது–மனம் எண்ணியதை; 22. வேட்டது. விரும்பியது; 23. கேட்டை–கேட்பாயாக; வரையல் – அவசரப்படாதே; 25. தகையார்–அழகுடையார்; 25. வாங்கி–வளைத்து; இணர்–மலர்க் கொத்துக்களை; 27. சினை அலர்–கிளைகளில் மலர்ந்த; பொருப்பான்–பொதிய மலைக்குரிய பாண்டியன்; 29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/182&oldid=1130145" இலிருந்து மீள்விக்கப்பட்டது