பக்கம்:மருதநில மங்கை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை183


கெட்டுத் திரியவில்லை. நீ இவ்வாறு ஒழுக்கம் கெட்டுவரப், போன இடத்தில் நீ எதைக் கண்டுவிட்டாய்? அதை நான் அறியக் கூறு,” என்றாள்.

தன் களவு வாழ்க்கையைத் தன் மனைவி அறிந்து கொண்டது கண்டு கலங்கிய இளைஞன், அவளுக்கு ஏற்ப எதையேனும் கூறி, அவளை ஏமாற்றத் துணிந்தான், “நான் சென்று தங்கிய இடத்தைக் கேட்டறியத் துடிக்கும் தோளாய்! கூறுகிறேன் கேள். நாம் இப்போது மேற்கொண்டிருக்கும் இல்வாழ்க்கை நிலையை அடுத்து, நாம் மேற்கொள்ள வேண்டிய துறவு வாழ்க்கையில், நம் கடமைகள் இன்னின்ன என்பதை அறநூற் சான்று காட்டி அறிவிக்க வல்ல கடவுளராகிய முனிவர் சிலரைக் கண்டேன். அவர்பால் அவ்வறம் கேட்க, ஆங்குத் தங்கினேன். அதனால் வரக் காலம் கடந்துவிட்டது!” என்று கூறினான்.

கணவன், கடவுளரைக் கண்டு அவர்பால் தங்கி வந்தேன் என்று கூறினானாயினும், அவன் கடவுளரைக் கண்டிலன்; இல்லறக் கடமைகளையே கடைப்பிடிக்காத அவன், அதற்கு அடுத்த நிலையாய வானப்பிரத்த நிலைக்கு வழிதேட மாட்டான்; அவன் யாரோ சில பரத்தையர்பாலே தங்கி வந்துளான் என உறுதியாக நம்பிய அவள், “அன்ப! உன்னால் கடவுட்டன்மை உடையாராகக் கருதப்பட்டு, உன்னால் வணங்கத்தக்கவர், சோலையில் அலரும் மலர் அணிந்து, பெண்மான் போலும் பார்வை வாய்ந்த பரத்தையர் பலராவர். அப் பரத்தையருள் நீ கூறிய பரத்தை யாவள்? அடியாளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/185&oldid=1130149" இலிருந்து மீள்விக்கப்பட்டது