பக்கம்:மருதநில மங்கை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186புலவர் கா. கோவிந்தன்


உறையும் திருப்பரங்குன்றத்தில், மாரிக்காலத்தில் பலநாள் தங்கி மகிழ்ந்த பரத்தையரைக் கண்டாயோ?” எனக் கேட்க எண்ணியவள், அப்பொருள் தோன்றுமாறு, “அன்ப! நீர் பலகால் மூழ்கித், தூய ஆடை அணிந்து, அழியா நோன்பு மேற்கொண்டு சூரனைக் கொன்ற செவ்வேல் முருகனை வீடு பேற்றில் கொண்ட பேராசையால், பல நாளும் பரவி வழிபட்டு, அவன் உறையும் பரங்குன்றத்தில், மாரிக் காலத்தும் அகலாது, உன்னோடு இருந்து தவவொழுக்கம் மேற்கொண்ட கடவுளரைக் கண்டாயோ?” எனப் பிறிதொன்றை வினாவினாள்.

இறுதியாக, “அன்ப! நீ கண்ட பரத்தையர் பலருள், மணம் நிறை மலர் மாலைகளை பணிந்தும், சந்தனம் பூசியும் மணம்நாறும் உன் மார்பை, அது தன் பண்டைத் தூய்மை கெட்டுப் பாழாகுமாறு, தன் பல்லாலும், நகத்தாலும் வடுப்பல செய்த அப்பரத்தை யாவள்? அதை நான் அறியக் கூறு. பெரியோரால் வெறுக்கத் தக்க பழியுடையாய்! நீ ஈங்குச் சிறிது பொழுது தங்கினும், அப்பரத்தையர் உன்னைச் சினப்பர். உன் ஒழுக்கக் கேட்டை. உணர்ந்து, உன்னைப் பிரிந்து வாழும் வன்மையில் நான் தேறிவிட்டேன். ஆகவே ஈண்டு நில்லாது ஆண்டுச் செல்க, செல்லாயாயின், நல்ல மாலை அணிந்து மலர்ந்து தோன்றும் உன் மார்பின் மீது பெருங்காதல் கொண்ட, நீண்ட கரிய கூந்தலையுடைய அப்பரத்தையர்க்கு முட்டுப் பாடு உண்டாம். ஆகவே, அவர்பால் விரைந்து செல்க!” எனக் கூறி விரட்டினாள்.

ஆனால், அதை வெளிப்படைச் சொற்களால் விளங்கக் கூறாது, இதையும் குறிப்பு மொழிகளால் கூறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/188&oldid=1130153" இலிருந்து மீள்விக்கப்பட்டது