பக்கம்:மருதநில மங்கை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188புலவர் கா. கோவிந்தன்


மாயமோ கைப்படுக்கப் பட்டாய்; நீ கண்டாரை 15
வாயாக யாம்கூற வேட்டீவாய் கேளினி

பெறல்நசை வேட்கையின் நின்குறி வாய்ப்பப்
பறிமுறை நேர்ந்த நகாராகக்; கண்டார்க்கு
இறுமுறை செய்யும் உருவொடு நும்இல்
செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ? 20

நறும்தண் தகரமும், நானமும் நாறும்
நெறிந்த குரல்கூந்தல் நாளணிக்கு ஒப்ப
நோக்கிற் பிணிகொள்ளும் கண்ணெடு மேனாள்நீ,
பூப்பலிவிட்ட கடவுளைக் கண்டாயோ?

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் 25
சூர்கொன்ற செவ்வேலான் பாடிப் பலநாளும்
ஆராக் கனைகாமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?

கண்டகடவுளர் தம்முளும், நின்னை
வெறிகொள் வியன்மார்பு வேறாகச் செய்து 30
குறிகொளச் செய்தார்யார்? செப்பு; மற்று, யாரும்
சிறுவரைத் தங்கின் வெகுள்வர்; செறுதக்காய்!
தேறினேன்; சென்றீநீ; செல்லாவிடுவாயேல்,

நற்றார் அகலத்துக்கு ஓர்சார மேவிய
நெட்டு இரும்கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் 35
முட்டுப்பாடு ஆகலும் உண்டு.”

பரத்தை வீடு சென்று வந்த தலைவன், தலைவிக்கு அஞ்சிக் கடவுளரைக் கண்டு வந்தேன் எனக் கூற, அதற்கு அவள் கூறி ஊடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/190&oldid=1130155" இலிருந்து மீள்விக்கப்பட்டது