பக்கம்:மருதநில மங்கை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை193


கூன் இடையூறு ஆகாவாறு, சிறிதே புணர்தற்கு என் பக்கத்தே வருக!” எனக் கூறி அழைத்தான்.

குறளன், மேலும் மேலும் தன் கூனைப் பழிக்கவே, அவளுக்குச் சினம் மிகுந்தது. “சீ கேடு கெட்டவனே! என்னைவிட்டு அப்பால் நட!” என்று கூறி, அவனை விலகி நின்றாள். விலக்கவும் விலகாது, விலகவும் விடாது, அவன் தன்னை அணுகுவது கண்ட கூனி, “மக்கள் வடிவில் ஒரு பாதியைக் கொண்ட உருவத்தாய்! இவ் இழிவொழுக்கத்தை இனிக் கைவிட்டொழிக!” என அறிவுறுத்தி விட்டு, மீண்டும் பேச்செடுத்து, “ஏடா! நான் கூனிதான். ஆயினும் கூனிய என் உடலை அணைத்து, அன்பு காட்டி, என்னை என்வாழ்நாள் உள்ளளவும் வைத்துக் காப்பவர் ஆயிரவர் உளர். அவ்வாறாகவும், பரத்தைக் குணம் படைத்த இக்குறைளன், தழுவ உன் பக்கத்தைத் தாராய்! எனக்கூறி, எள்ளி நகைக்கின்றான். இவன் இவ்வாறு எள்ளி நகைக்க, எனக்குற்ற குறைதான் யாதோ?” என்று அவன் கேட்பத் தனக்குள்ளே கூறிக் கொண்டாள். அவ்வாறு கூறியும் அவள் சினம் அடங்கவில்லை. அதனால், “உளுந்து பல ஒன்றுகூடிப் பண்ணிய பணியாரத்தைக் காட்டினும், உருவால் உயர்ந்திராத ஏ, குறளா! உன் பிறப்பினும், கூன் பிறப்பு இழிந்ததோ!” என்று கேட்டுவிட்டு, அப்பாற் சென்றாள்.

செல்லும் அவள் பின்புறத்தைக் கண்டான் குறளன் காமநோய் அவனை அலைத்தது. அதனால், அவளை எள்ளி நகைப்பதை விடுத்தான். “நெஞ்சே! ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று கூறி இவள் பின் திரிகிறேன். நான் அவ்வாறு திரியவும், அதைப்

மருதம்–13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/195&oldid=1130165" இலிருந்து மீள்விக்கப்பட்டது