பக்கம்:மருதநில மங்கை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192புலவர் கா. கோவிந்தன்


குறளன் உறுதிப்பாட்டையும், உள்ளக் காத்லையும் உணர்ந்த கூனி, “இவன் மனத் துணிவின் மாண்பைக் காண் !” எனத் தனக்குள்ளே கூறி வியந்து கொண்டாள். ஆனால், “அகத்தே இத்தகைய உயர்ந்த காதலையுடைய இவன், அதை விரும்பும் வகையில் எடுத்துக் கூறும் வகையற்றுச், சினம் பிறக்கும் வகையில் வெறுப்புக் கூறுகின்றனனே!” என எண்ணி வெகுண்டாள். அதனால், “சூதாடு கருவிகளை வைத்தற்கெனக் குடைந்தெடுத்த வல்லுப் பலகையை எடுத்து நிறுத்தியதுபோல் தோன்றும் ஏ, குறளா! மகளிரை மனம் மகிழப் பண்ணிப் பின்னரே கூடுதல் வேண்டும் என்ற காதல் முறையினைக் கல்லாதவனே!” என்றெல்லாம் விளித்து இழித்துரைத்தாள். பின்னர், “ஏடா! எவரும் இயங்காத இங்கே இந்நேரத்தில், என் கையைப் பிடித்து, இல்லத்திற்கு வந்து இன்பம் தருக! என்று கூறி இழுக்கும் கொடியவனே! பெண்டிர் எவரும் உன்னோடு பிறக்கவில்லையோ?” என்று கூறிச் சினந்தாள்.

கூனி கோபிப்பது கண்டும், குறளன் எள்ளி நகையாடலைக் கைவிட்டிலன். அதனால், “கூன் தலைக்கு மேலே உயர்ந்து தோன்ற, கொக்கை உரித்து வைத்தாற் போல், வளைந்த வடிவோடு வந்து நிற்பவளே! நான் கூறுவதைக் கேள். உன்னை நான் மார்போடணைத்துக் கொள்வேனாயின், உன் முதுகின் கூன் என் நெஞ்சிலே குத்தும். உன்னை உன் முதுகின் பின்புறமாக அனைத்துக் கொள்வேனாயின், நீண்டு நிற்கும் உன் கூன், என்னைக் கிச்சுகிச்சு மூட்டும். ஆதலின், உன்னை அணைத்துக் கொள்வது என்னால் இயலாது. உன்னைக் கூடி மகிழ்வதொன்றே இயலும், ஆகவே, நம் கூட்டத்திற்கு உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/194&oldid=1130162" இலிருந்து மீள்விக்கப்பட்டது