பக்கம்:மருதநில மங்கை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை205


குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன்; நீ என்றும்
புதுவன ஈகை வளம்பாடிக், காலிற்
பிரியாக், கவிகைப் புலையன் தன் யாழின் 10
இகுத்த செவிசாய்த்து இனிஇனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி, மெய்எண்ணில்
தபுத்த புலர்வில புண்.

ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கிப் பிடிமாண்டு 15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டாடும்
பார்வைப்போர் கண்டாயும் போறி, நின்தோள் மேலாம்
ஈரமாய்விட்டன. புண்.

கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம்முழுதும் கையின்
துடைத்து நீ வேண்டினும், வெல்லாது கொண்டாடும் 20
ஒட்டியபோர் கண்டாயும் போறி, முகந்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.

ஆயின், ஆயிழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய நின்மெய் தொடுகு,
அன்னையோ! மெய்யைப் பொய்என்று மயங்கிய கைஒன்று 25

25 அறிகல்லாய் போறி, காண் நீ.
நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள் இனி,

அருளுகம்! யாம் யாரேம்? எல்லா! தெருள
அளித்து நீ பண்ணிய பூழெல்லாம் இன்னும்
விளித்து, நின் பாணனோ டாடி அளித்தி;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/207&oldid=1130213" இலிருந்து மீள்விக்கப்பட்டது