பக்கம்:மருதநில மங்கை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204புலவர் கா. கோவிந்தன்


வொழுக்கத்தைக் கையோடு பிடித்து விட்டாய். நான் உனக்குத் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாயாக!” என்று இரந்து கூறி வேண்டிக் கொண்டான்.

கணவன், தவறினை ஒப்புக்கொண்டு, மன்னிக்க வேண்டியும், அவள் சினம் தணிந்திலது. அதனால், அவள், “அன்ப! நீ வேண்டியவாறு, உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் யார்? அதற்கு எனக்கு என்ன உரிமை உளது? மேலும், உன் அன்பைப் பெற்ற அப்பரத்தையர், நீ கைவிடின் பெரிதும் கலங்குவர். அவர் வருந்தாவாறு, அவரைப் பாணன் துணையால் பெற்று, அவர்க்குப் பேரின்பம் தந்து மகிழ்ந்து வாழ்வாயாக!” எனக் கூறி வெறுத்து விரட்ட விரும்பினாள். ஆனால் அதை அவ்வாறு விளங்கக் கூற அவள் பெண்ணுள்ளம் நாணிற்று. அதனால், “அன்ப! அக்காடைகள், முன்னர் உன்னால் அளிக்கப் பெற்றுப் பின்னர்க் கைவிடப்படின் வருந்தும். அவை வருந்தாவாறு, அவற்றைப் புலையன் துணையால் பெற்றுப், போர் செய்யவிட்டு மகிழ்வாயாக!” என்று கூறி, அவண் நில்லாது, அவ்விடம் விட்டு அகன்றாள்.

“நில்,ஆங்கு! நில் ஆங்கு இவர்தரல் எல்லா! நீ,
நாறுஇருங் கூந்தலார் இல்செல்வாய், இவ்வழி,
யாறு மயங்கினை போறி, நீ வந்தாங்கே
மாறுஇனி நின்னாங்கே நின் சேவடி சிவப்பச்!

செறிந்து ஒளிர் வெண்பல்லாய் ! யாம் வேறு இயைந்த 5
குறும்பூழ்ப் போர்கண்டேம், அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/206&oldid=1158929" இலிருந்து மீள்விக்கப்பட்டது