பக்கம்:மருதநில மங்கை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை203


புணர்ந்து வந்துளாய். அன்ப! நீ மறைவாக நிகழ்த்திய அக் காதல் விளையாட்டை உன் முகமே உணர்த்தி விட்டது!” என்று அவன் மேற்கொண்ட பரத்தையர் ஒழுக்கத்தினைத் தான் உணர்ந்திருப்பதை உரைத்து ஊடிச் சினந்தாள்.

“இவள் என் ஒழுக்கக் கேட்டினை உணர்ந்து கொண்டாள். ஆனால், அதை ஒப்புக் கொண்டால், இவள் உளம் வருந்துவாள். ஆகவே, அதை அறவே மறுத்தல் வேண்டும்!” எனத் துணிந்தான் இளைஞன். அதனால், “பெண்ணே! நீ கூறிய எதையும் நான் அறியேன். இஃது உண்மை. இதை உறுதி செய்ய உன்னைத் தொட்டுச் சூளுரைக்கவும் தயங்கேன்!” என்று கூறினான்.

தவறும் செய்துவிட்டு, அதை மறைக்கத் தன்னைத் தொட்டுச் சூளுரைக்கவும் துணிந்த கணவன் செயல் கண்டு கலங்கிய அவள், “ஐயே!” என இசைத்து அவனை இகழ்ந்தாள்.

தான் சூளுரைக்கத் துணிந்தமை கண்டும், மனைவி, தன்னைத் தெளியாமை கண்ட இளைஞன், “பெண்ணே! நான் நடந்ததைக் கூற, அதைப் பொய்யென்று தள்ளும் நீ, உலகியலறியாப் பேதை போலும்!” எனக் கூறிச் சிறிதே சினந்தான். ஆனால், அவளோ, அவன் சினம் கண்டும் சிந்தை கலங்கினாளல்லள். மனைவியின் மனவுறுதியைக் கண்டான். பொய்யுரைப்பதில் இனிப் பயனில்லை, உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பை வேண்டுவதே வழி எனக் கருதினான். உடனே, “நல்லவளே! நான் செய்த தவறுகளை நீ கண்டு கொண்டாய். நான் கூறியன பொய் என்பதையும் புரிந்து கொண்டாய். என் கள-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/205&oldid=1130191" இலிருந்து மீள்விக்கப்பட்டது