பக்கம்:மருதநில மங்கை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை209


அவையும், அவளும் குறை காணும் தம் செயல் மறந்திருப்பர் எனும் துணிவால், “பெண்ணே ! போன இடத்தில் குதிரை ஏற்றம் பழகினேன். அதனாலேயே என் வருகை தடைப்பட்டது!” என்றான்.

அவன் அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் அவனை உற்று நோக்கினாள். ஆடையும் அணிந்த மாலையும் நிலைகுலைந்திருப்பதோடு, அவன் மேனியும் தன் நிலை திரிந்திருப்பதைக் கண்டாள். அவன் உடம்பெல்லாம், நகம் கொண்டு கீறியதாலும் பற்கள் அழுந்தியதாலும் உண்டான புண்கள் நிறைந்திருப்பதைப் பார்த்தாள். இவ்வாறு அவனைப் புண் செய்யும் ஆற்றல் வாய்ந்த பகைவர் ஒருவரும் இல்லை என்பதை அவள் அறிந்தவள். அதனால், அப்புண்கள் அவன்பால் விருப்பங் கொண்ட யாரோ ஒரு பெண், அவனோடு கூடிப் புணர்ந்த காலத்தில் பண்ணிய புண்களே என்பதை உணர்ந்து கொண்டாள். அவன் ஆடை நலங்கியதும், சந்தனம் சிதைந்ததும், மாலை கசங்கியதும் அதன் விளைவே என அறிந்தாள். இவற்றால், கணவன் பரத்தையர் தொடர்பு கொண்டுளான், இதுகாறும் அவன் அவளிடத்திலேயே சென்றிருந்தான் என்பதை உறுதி செய்து கொண்டாள். அதனால், அவன், “குதிரை ஏறி உலா வந்தேன்!” எனக் கூறக் கேட்டதும், அவள் அவனை நோக்கி, “அன்ப! நீ ஊர்ந்த குதிரை எது என்பதை நான் அறிந்து கொண்டேன். அது, வனப்பு மிகுமாறு வாரி முடித்த அழகிய கூந்தலாகிய, அழகாகக் கத்தரித்துவிடப் பெற்ற பிடரி மயிரையும், கூந்தல் முடிமீது விரித்துப் பிணித்த துஞ்சு எனும் அணியாகிய சிவந்த

மருதம்–14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/211&oldid=1130223" இலிருந்து மீள்விக்கப்பட்டது