பக்கம்:மருதநில மங்கை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210புலவர் கா. கோவிந்தன்


தலையாட்டத்தையும், இடையிடையே நீலமணி வைத்துத் தைத்துக் கழுத்தைச் சுற்றி அணியும் கட்டுவடமாகிய வல்லிகை எனும் கழுத்தாரத்தையும், காதிற் கிடந்து தொங்கும் புல்லிகை காதணியாகிய கன்னசாமரையினையும், தெய்வ உத்தி எனும் தலையணியில் பிணித்துக், கண்களில் படுமாறு தொங்கவிடப் பெற்ற சுட்டி எனும் அணியாகிய சம்மட்டி எனும் சாட்டையும், நூலால் ஆய மெல்லிய மேலாடை ஆகிய கடிவாளத்தையும், பன்னிற மணிகளைக் கொண்டு மூன்று கோவையாகப் பண்ணிய முக்கண்டன் எனும் கழுத்து வடமாகிய கண்டிகை எனும் கழுத்தணியையும் அணிந்து, மேகலையாகிய தண்டையும் சிலம்பாகிய கெச்சையும் கலீர் கலீர் என ஒலிக்க வந்து, உன்னால் காதலிக்கப் பெற்று, நீ ஊர்ந்து திரியும் காமக் கிழத்தியாகிய அக் குதிரையைச் செண்டு வெளியில் கொண்டு சென்று ஊராது, வண்ணம் தீட்டி வனப்புற்று விளங்கும் அவள் மாடத்தில், அழகிய நிலா முற்றத்தில், ஆதி எனும் விரைவு தோன்ற ஊர்ந்து இளைத்தாய். அன்ப! நீ நல்ல குதிரைச் சேவகன் ஆகுவை, நீ வாழ்க!

“அன்ப! நம் மதுரை மாநகரில், வீதிகளில் வீழ்ந்து கிடக்கும் குப்பை கூளங்களை, விடியற்காலத்தே சென்று பெருக்கி எடுத்து, வாரிக் கொண்டுபோக, அவ்விடங்களில், பெருக்கிய துடப்பம் இழுத்த கோடுகள் வரி வரியாகத் தோன்றுவது போல், உன் மேனியில் வரிவரியாகப் புண் படுமாறு கீறியதும் அக்குதிரை தானோ? கூரிய நகம் பொருந்திய குளம்பினைக் கொண்ட அக்குதிரை மிகவும் கொடிது போலும். அக் குதிரையை அடக்கி ஆளும் அன்ப! அதனால் அழிவுறாது நீ நெடிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/212&oldid=1130226" இலிருந்து மீள்விக்கப்பட்டது