பக்கம்:மருதநில மங்கை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218புலவர் கா. கோவிந்தன்


உன்னைக் கூடி, மேலும் அக் கூட்டமே விரும்பி, உன் வரவை எதிர்நோக்கிக் கிடக்கும் பரத்தை மகளிரின் வீடுகளின் வழியாக, அவர்கள் பார்த்து வருந்த, இளையாளாகிய அப்புதிய வேழத்தின்மீது ஏறித் திரியும் இயல்புடையவன் நீ. அன்ப! உன் ஆணைக்கு மீறிவிடாது, ஓர் அளவில் நிற்பதற்குத் தேவையான மதம்பட, அவ்வி யானையை, இடையே சிறிது பொழுது நீர்க்கு விட்டு, மீண்டும் ஏறித் திரியும் இயல்புடையவன் நீ உன்பால் பேரின்பம் நுகரமாட்டாது, சிறிதே நுகர்ந்தாள் ஓர் இளம் பரத்தையை, அவள் கண்மை கரையக் கண்ணீர் சொரிந்து அழியுமாறு சிலநாள் கைவிட்டுப் பின்னர்க் கூடி மகிழ்பவன் நீ அத்தகைய நீ இன்று என் மனை வந்தடைந்தாய். இவ்வருகையும் என்பால் அன்பு கொண்டு வந்த வருகை யன்று. உன்பால் உறவுகொண்ட இவ்வூர்வாழ் பரத்தையர், நீ, புதியாளொருத்தியின் பின் திரியக் கண்டு சினப்பதைத் தவிர்த்தற் பொருட்டே, நீ இன்று, இங்கு வந்து நிற்கின்றாய். நீ வேறு ஒருத்தியின் பின் சென்றிலை, உன் மனைக்கே சென்றுளாய் எனக் கருதி அவர்கள் ஏமாறுக என எண்ணியே நீ இங்கு வந்துளாய். அதை அப் புதியாள் அறியின், பாகன் ஏறி ஊராவாறு மதம்பட்டுத் திரியும் யானைபோல், அவள் உன் ஆனைக்கு அடங்காது கடுஞ்சினம் கொள்வள். அவ்வாறு சினம் கொண்டு செல்வாளை அடக்கி ஆளுதற்காம் வழிவகை யாது என ஆராய்ந்து கொள்ள ஆங்குச் செல்க! ஈண்டு நில்லற்க!” எனப் புலந்து கூறினாள்.

"அன்னை, கடுஞ்சொல் அறியாதாய் போல நீ
என்னைப் புலப்பது ஒறுக்குவேன் மன்யான்;
சிறுகாலை இற்கடை வந்து, ‘குறிசெய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/220&oldid=1130245" இலிருந்து மீள்விக்கப்பட்டது