பக்கம்:மருதநில மங்கை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை219


அவ்வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ்வழிப்பட்டாய் சமனாக, இவ்வெள்ளல்; 5
முத்தேர் முறுவலாய் ! நம்வலைப் பட்டதோர்
புத்தியானை வந்தது காண்பான் யான் தங்கினேன்.

ஒக்கும்;
அவ்வியானை, வனப்புடைத் தாகலும் கேட்டேன்;
அவ்வியானைதான் சுண்ண நீறுஆடி, நறுநறா நீர்உண்டு, 10

ஒண்ணுதல் யாத்த திலக அவிர் ஒடைத்,
தொய்யில் பொறித்த வனமுலை வான்கோட்டுத்,
தொய்யகத் தோட்டிக், குழை தாழ்வடிமணி,
உத்தி பொறித்த புனைபூண் பருமத்து,

முத்து ஏய்க்கும் வெண்பல் நகைதிறந்து, 15
நன்னகர் வாயில் கதவவெளில் சார்ந்து,
தன் நலம்காட்டித், தகையினால் கால்தட்டி வீழ்க்கும்;
தொடர் தொடராக வலந்து படர்செய்யும்;
மென்தோள் தடக்கையின் வாங்கித் தற்கண்டார்

நலம் கவளம் கொள்ளும், நகைமுக வேழத்தை 20
இன்று கண்டாய்போல் எவன் எம்மைப் பொய்ப்பது நீ?
எல்லா! கெழீஇத், தொடிசெறித்த தோளிணை தத்தித்
தழிஇக் கொண்டு ஊர்ந்தாயும் நீ;
குழிஇ, அவாவினால் தேம்புவார் இற்கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ! 25
மிகாஅது, சீர்ப்படஉண்ட சிறுகளி ஏர்உண்கண்
நீர்க்குவிட்டு ஊர்ந்தாயும் நீ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/221&oldid=1130246" இலிருந்து மீள்விக்கப்பட்டது