பக்கம்:மருதநில மங்கை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220புலவர் கா. கோவிந்தன்


சார்ச் சார் நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம்
சிறுபாகராகச் சிரற்றாது மெல்ல
விடாஅது, நீ எம் இல்வந்தாய்; அவ்வியானை 30
கடாம்அம் படும் இடத்து ஓம்பு.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத், தலைவி தாழ்த்த காரணம் என் என, யானை ஊர்ந்தேன் என அவன் கூற, “நீ ஊர்ந்த யானை பரத்தையே!” எனப் புலந்து கூறி, அவனை அவள் நெருக்கியது இது.

1. அன்னை - அத்தகைய; 2. ஒறுக்குவேன் —வருந்துவேன்; 3. சிறுகாலை - விடியற்காலம்; 5. சமனாக - இருவரையும் ஒன்றாக மதிக்கும்; 10. நீறு - பொடி; ஆடி - பூசி; நறா - கள்; 11. அவிர் - ஒளிவீசும்; ஓடை - நெற்றிப்பட்டம்; 12. கோடு - தந்தம்; 13. தோட்டி - அங்குசம்: குழை - மகரக்குழை; 14. உத்தி - திருமகள் உருவம் பொறித்த தலையணி; பருபம் - கழுத்தில் இடும் மெத்தை; 15. ஏய்க்கும் ஒக்கும்; 16. நகர்-வீடு; வெளில் யானை கட்டும் இடம்; 17. தகை-அழகு; தட்டி-தடுத்து; 18. தொடர்-சங்கிலி; வலந்து - கட்டுண்டு; படர் செய்யும் துன்பம் தரும்; 20. நலம்-நல்ல பண்பு களை; கவளம் கொள்ளும்-கவளமாக உண்ணும்; 22. கெழீஇ - சேர்ந்து; 24. தேம்புவார் வருந்துவார்; ஆறா-வழியாகக் கொண்டு; 25. உவா-யானை; இளைய மகளிர் எனும் இரு பொருள் உடைத்து; 26. சிறுகளி சிறிய மதம்; ஏர்உண் கண் அழகிய மை தீட்டிய கண்; நீர்க்குவிட்டு யானைக்கு ஆம் கால் நீராடவிட்டு; மகளிர்க்கு ஆம் கால் - அவள் கண் நீர் சிந்தவிட்டு; 28, பெண்டிர்-பரத்தையர்; 29. சிறு பாகராக-பாகர் ஏற மாட்டாது தொழில் குறையுடையராம்படி மதம்பட; சிரற்றாது சினங்கொள்ளாவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/222&oldid=1130247" இலிருந்து மீள்விக்கப்பட்டது