பக்கம்:மருதநில மங்கை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33


நீ ஆடியது குமரிப் புதுப் புனல்

வையை ஆற்றின் வளம் மிகுந்த மதுரைமா நகரில் இளங்காதலர் இருவர், இல்லற வாழ்க்கை மேற்கொண்டு இன்புற்று வாழ்ந்திருந்தனர். ஆற்றில் புது வெள்ளம் வரக் கண்டு, ஊரார் புனல் விழாக் கொண்டாடும் காலம் வந்தது. அந்நிலையில், நாள்தோறும் பாற்சோறே உண்டு வந்தான் ஒருவன், அதில் சிறிது வெறுப்புத் தட்டவே, இடையில் சிலநாள் புளிச்சோறு உண்பதுபோல், மனைவி தரும் பேரின்ப வாழ்வைப் பெருகச் சுவைத்தமையால் சிறிதே வெறுத்த இளைஞன், இடையே சிலநாள், ஒருசில பரத்தையரோடு உறவு கொண்டு, அவர் சேரி சென்று வாழ்ந்திருந்தான். அவன் ஒழுக்கக் கேடறிந்து வருந்தினாள் அவன் மனைவி.

புதிய புதிய மலர்களைத் தேடிச் சென்று, அவற்றில் உள்ள தேனைக் குடித்துத் திரியும் தேனீக்கள் போல், நாள் தோறும் புதிய புதிய பரத்தையரைத் தேடிப்பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/223&oldid=1130248" இலிருந்து மீள்விக்கப்பட்டது