பக்கம்:மருதநில மங்கை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை225


"அன்ப! பாணன் துணையாக, ஒரு பரத்தையைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்தாய். பின்னர், அப்பரத்தையர் ஒழுக்கத்தின் பழியுணர்ந்து, அதனின்றும் மீளக் கருதியிருக்குமளவில், பேரழகுமிக்க புதிய பரத்தை யொருத்தி தோன்றித், தன் பேரழகால் உன்னைத் தன்வயமாக்கிக் கொண்டாள். பரத்தையர் ஒழுக்கம் பழி உடைத்து என உணரும் உன் உள்ளமும் அவள் அழகிற்கு அடிமைப்பட்டு விட்டது. நீ அவளை விட மறந்து வாழ்கின்றாய்!” என அவன் மேற்கொண்ட பரத்தைய ரொழுக்கத்தினை எடுத்துக் காட்டி இடித்துக் கூறிக் கண்டித்தாள்.

“புனலாடினேன்” எனக் கூறவும், அதை ஏற்றுக் கொள்ளாது, தன்மீது பரத்தையர் ஒழுக்கம் எனும் பழி சூட்டும் மனைவி கருத்தைத் தன் வாய்ச்சொல் மாற்றாது, அவள் தன் வெறும் சொல் கேட்டு மனம் இரங்காள் என அறிந்த இளைஞன், “பெண்ணே ! வையை யாற்று வெள்ளத்தில் ஆடி மகிழவே, நான் அங்குத் தங்கினேன். அதுவே உண்மை என்பதை, வேண்டுமானால், தெய்வத்தின் மீது ஆணையிட்டுக் கூறுவேன். உண்மை அதுவாகவும், நான் செய்யாத ஒரு குற்றத்தை என்மீது ஏற்றிச் சினவாதே. அவ்வாறு வீண்பழி கூறுவதால் உனக்கு உண்டாம் பயன் யாது?’ என்று கூறிப் பணிந்து நின்றான்.

கணவன், “கடவுளைக் காட்டிச் சூள் உரைப்பேன்!” எனக் கூறியும், அவள் அவன் சொல்லை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். “அன்ப! நீ ஆடிய அவ் வையை யாறு, தன் புறத்தை மலர்கள் மறைக்க, காண்பார் கண்ணிற்கு மகிழ்ச்சி தருமேனும், அதன்கீழ்த், தன்னை அடைந்தாரின் கால்களை ஈர்த்துக் கொள்ளும் கொடிய புனல் உண்டு

மருதம்–15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/227&oldid=1130252" இலிருந்து மீள்விக்கப்பட்டது