பக்கம்:மருதநில மங்கை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224புலவர் கா. கோவிந்தன்


வீசும் மலர்ச் சோலையில், மகளிரின் மானத்தைக் காக்கும் நாண் எனும் நல்ல வேலியை அழித்து நண்பகற் காலத்திலேயே பெருக்கெடுத் தோடி வந்த அப் புது வெள்ளத்தில், நீ விரும்பும் பரத்தையரைத் தேடிப்பிடித்து வந்து தந்து மகிழ்விக்கும் பாணனாகிய தெப்பம் துணையாக ஆடி மகிழ்ந்தாய் என ஊரார் உரைக்க அறிந்தேன்.

“மேலும், அப்புனலாட்டத்தில், உன் ஆசை குறையாமையால், மேலும் மேலும் ஆர்வம் மிகுமாறு ஆடும் ஆட்டத்தைக் காண்பவர், ஊருள் புகுந்து உரைக்கும் அலரை நான் அறிந்து கொள்வனோ எனும் அச்சம் உன் உள்ளத்தை அலைக் கழித்தமையால், உன் புனலாட்டத்தை அவ்வூரார் அறிந்து கொள்ளாவாறு, சிறிதே நீ மறைந்து நிற்க, அது கண்டு பொறாத அப்பரத்தைப் புனல், உன்மீது சினம்கொண்டு, அச்சினத்தால் வளைந்த புருவமாகிய அலையை வீசி, காற்சிலம்பினின்றும் எழும் ஆரவாரத்தால் உன்னை அச்சுறுத்தி, உன் உள்ளுணர்வு உணர்த்த, நீ மேற்கொள்ள விரும்பும் நல்லொழுக்கத்தைத் தடைசெய்து தளைத்து நிற்க, அந் நிலையில் சினந்து மேல்வந்த பிறிதொரு புது வெள்ளம், உன்னை அடித்துக் கொண்டே அனைத்துச் சென்றது. அக் காட்சியைக் கண்டு வந்து கூறினாரும் உளர். அங்ஙனம் அடித்துச் சென்ற அப் புது வெள்ளம், நல்லொழுக்க வுணர்வு மிக்க உன் நல்ல வுள்ளத்தைத் தன் வயமாக்கிக் கொண்டமையால், நீ அப்புது வெள்ளத்தினின்றும் வெளியேறிக் கரை காணும் கருத்திழந்து கலங்குகின்றாய்!” என, அவன் ஆடிய புனலாட்ட நிலையினைக் கூறுவாள் போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/226&oldid=1130251" இலிருந்து மீள்விக்கப்பட்டது