பக்கம்:மருதநில மங்கை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை227


தெரிகோதை அந்நல்லாய் ! தேறியல் வேண்டும்;
பொருகரை வாய்சூழ்ந்த பூமலி வையை 10
வருபுனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?
ஒஒ! புனலாடினாய் எனவும் கேட்டேன்; புனல், ஆங்கே,
நீள்நீர்நெறி கதுப்பு, வாரும் அறலாக,

மாண் எழில் உண்கண், பிறழும் கயலாகக், 15
கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாக,
நாணுச் சிறை அழித்து, நண்பகல் வந்த அவ் வியாணர்ப் புதுப்புனல் ஆடினாய், முன்மாலைப் பாணன் புணையாகப் புக்கு;

ஆனாது, அளித்து அமர்காதலோடு அப்புனல் ஆடி 20
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன், குளித்து ஆங்கே,
போர்த்த சினத்தால் புருவத் திரையிடா
ஆர்க்கும் ஞெகிழத்தால் நன்னீர் நடை தட்பச்
சீர்த்தக வந்த புதுப்புனல் நின்னைக் கொண்டு 25
ஈர்த்துய்ப்பக் கண்டார் உளர்;

ஈர்த்தது, உரைசால் சிறப்பின்நின் நீருள்ளம் வாங்கப்
புரைநீர் புதுப்புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டது.உம் இலை;

நிரைதொடீஇ ! பொய்யா வாள்தானைப் புனைகழற்கால் தென்னவன் 30
வையைப் புதுப்புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா .மொழிவது எவன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/229&oldid=1130254" இலிருந்து மீள்விக்கப்பட்டது