பக்கம்:மருதநில மங்கை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228புலவர் கா. கோவிந்தன்


மெய்யதை; மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப்புனல்,
பல்காலும் ஆடிய செல்வுழி ஒல்கிக் 35
களைஞரும் இல்வழிக் கால் ஆழ்ந்து, தேரோடு
இளமணலுள் படல் ஓம்பு; முணைநேர்
முறுவலார்க்கு ஓர் ஈகை செய்து.”

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனைத், தலைவி, தாழ்த்த காரணம் என் எனப் புனலாடினேன் என்று அவன் கூற, “நீ ஆடியது பரத்தைப் புனலே!” எனக் கூறி, அவள் அவனை நெருக்கியது இது.

1. ஓரும் – அசை; 2. யாழ – அசை; 3. வதுவை விழவு – திரு மணவிழா; 4. மாட்டு மாட்டு – இடந்தோறும் இடந்தோறும்; 5. பூட்டு மான்–பூட்டிக்கிடக்கும் குதிரைகளைக் கொண்ட; 5. புடைத்த – ஆர வாரித்த; மறுகு – தெருவு; 6. பாட்டாதல் சான்ற – பெரும் அளவில் பேசப்பட்டது; 7. காட்டிய – காட்ட; 9. தேறியல் வேண்டும் – தெளிய வேண்டும்; 10. பொருகரை – அழியும்வரை; 12. செய்யாமொழிவது – செய்யாத தப்பிற்குக் கண்டித்தல்; 14 கதுப்பு – கூந்தல்; வாரும் – நீர் ஒழுகும்; 16. பரப்பாக – பரப்பின்கண்; 17. சிறை – அணை ; 18. யாணர் – புது வருவாய்; 20. ஆனாது – ஆசை அடங்காது; 21. கவ்வை – அலர்; 22. குளித்து – மறைத்து; 24. ஞெகிழ் – சிலம்பு; நடை – நல்லொழுக்கத்தை; தட்ப – தடுக்க; 27. நீருள்ளம் – நல்லொழுக்கம் மிக்க உள்ளம்; வாங்க – தன்வயமாக்கிக் கொள்ள; 31. தவிர்ந்ததை – – தங்கியதை; 34. மல்பு – பெருகிய; 34. ஆடிய – ஆட: ஒல்கி – தளர்ந்து; 37. ஓம்பு – காத்துக் கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/230&oldid=1130255" இலிருந்து மீள்விக்கப்பட்டது