பக்கம்:மருதநில மங்கை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34


மனைவி துயர் காணாமையும் மன்னர்க்கு ஏற்றதோ?

ரசியல் நெறி அறிந்து ஆளும் நல்லரசன் அவன். அமரர்க்கும், அரக்கர்க்கும் ஆசிரியராய் அமர்ந்து அரசியல் வழிகாட்டிய வியாழனும், வெள்ளியும் ஆக்கி அளித்த இரு பெரும் அரசியல் நூல்களையும், ஐயம் திரிபு அறக்கற்று, அவை கூறும் நெறி நின்று நாடாண்டிருந்தான். குழந்தையைப் பார்த்து இன்புறும் தாய், அக் குழந்தை விரும்பும் பாலை, அது விரும்பும் காலம் அறிந்து, சுரந்து அளித்து வளர்த்தல் போல், மழை, தன் நாட்டு மக்கள் விரும்பும் காலத்தில், அவர் விரும்பும் அளவு அறிந்து, தப்பாது பெய்து காக்கும் நல்லாட்சி, தன் நாட்டில் வாழ்வார் அனைவர்க்கும் வாய்க்குமாறு, நடுவு நிலைமை முதலாம் நல்லியல்புகளின் நிலைக் களமாய் நின்று நாடாண்டிருந்தான். நெடிய பல தேர்களையும், நிறைந்த யானைகளையும் கொண்டிருந்தது அவன் நாற்படை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/231&oldid=1130256" இலிருந்து மீள்விக்கப்பட்டது