பக்கம்:மருதநில மங்கை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை231


நிற்கின்றனை உன் வரவேற்பை ஏற்று வந்தடைந்த உலக மக்கள் அனைவரும், அக்குடை நிழற்கீழ் இருந்து இன்புற்றுவாழ இவள் ஒருத்தி மட்டும், அக்குடையின் அறநிழற்கீழ் அகப்படாது, புறத்தே நின்று விட்டனளோ? இவள் புறத்தே நின்றவள் அல்லள். இவளும் உன் குடைநிழற்கீழ் வாழ்பவளே. உன் குடைநிழற் கீழ் வாழ்வாளொருத்தி, இவ்வாறு, நெற்றி பசலைபாய ஒளிகெட்டு உளம் குன்றி வாடுவதை நீ கண்டிலையோ? இதுகாறும் கண்டிலையாயின், இப்போதாயினும் கண்டு, இவள் துயர் துடைப்பாயாக!

“ஐய! நடுவு நிலைமை பிறழாத உன் செங்கோல் சிறப்பை, உலகம் பாராட்டிப் புகழ்கிறது. அச்செங்கோலாட்சியாலாம் சிறந்த பயனை உன் நாட்டில் உள்ளார் அனைவரும் அனுபவித்து அகம் மகிழ்கின்றனர். இவ்வாறு உன் ஆட்சியில் வாழ்வார் அனைவரும், உன் ஆட்சியின் நலங்களை நுகர்ந்து நன்கு வாழ, இவள் ஒருத்தி மட்டும், அவ்வாட்சி நலங்களுக்கு அப்பாற்பட்ட கொடுமைகளை அனுபவிக்கப் பிறந்தவளாவளோ? கொடுமை அனுபவிக்க வந்தவள் இவள் என என் உள்ளம் கொள்ளவில்லை. உன் நல்லாட்சியின் நற்பயனை அனுபவிக்க வந்தவளே இவளும். அவ்வாறாகவும், உன் ஆட்சிக்குட் பட்டா ளொருத்தி மட்டும், இவ்வாறு காதல் நோயால் கலங்கி, வாழ்வை வெறுத்து வருந்திக் கிடப்பதை நீ கண்டி லையோ? இதுகாறும் கண்டிலையாயின், இனியேனும் கண்டு, இவள் துயர் போக்குவாயாக!

“ஐய! “எங்கள் வேந்தன் ஆட்சிக் கீழ் வாழ்வார் எவரும் எத்தகைய இடையூறும் இல்லாமல் வாழ்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/233&oldid=1130258" இலிருந்து மீள்விக்கப்பட்டது