பக்கம்:மருதநில மங்கை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை233


செய்யக் கூடாதன என ஆன்றோர் விலக்கிய அறமல்லாக் கொடுமைகளுள், உன் காதலி கண் கலங்கி வாடவும், அக் கொடுமையைக் காணாதிருத்தலும் ஒன்றோ?” என்று வினாவி இடித்துக் கூறினாள்.

“நறவினை வரைந்தார்க்கும், வரையார்க்கும் அவைஎடுத்து
அறவினை இன்புறுஉம் அந்தணர் இருவரும்
திறம்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறுTஉம் தாய்போல் உலகத்து
மழை கரந்து அளித்து ஒம்பும் நல்லூழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல்நின் செம்மையில் தரவாய்ந்த
இழைஅணி கொடித்திண்தேர் இனமணி யானையாய்!

அறன் நிழல்எனக் கொண்டாய் ஆய்குடை; அக்குடைப்
புறநிழற்கீழ்ப் பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
பிறைநுதல் பசப்பு ஊரப் பெருவிதுப்பு உற்றாளை. 10

பொய்யாமை நுவலும் நின்செங்கோல், அச்செங்கோலின்
செய்தொழிற்கீழ்ப் பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
காமநோய் கடைக்கூட்ட வாழும்நாள் முனிந்தாளை.

ஏமம் என்று இரங்கும் நின் எறிமுரசம், அம்முரசின்
ஏமத்து இகழ்தாளோ இவள்? இவள் காண்டிகா, 15
வேய்நலம் இழந்ததோள் கவின்வாட உழப்பாளை;
ஆங்கு,
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்டக், கண் காணதற்காக, என் தோழி
தொடிகொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/235&oldid=1130260" இலிருந்து மீள்விக்கப்பட்டது