பக்கம்:மருதநில மங்கை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234புலவர் கா. கோவிந்தன்


தலைவன் பரத்தையிற் பிரிய, வருந்திய தலைவியின் துயர் நிலை கண்ட. தோழி, தலைவனை அடுத்து அறிவுரைத்தது இது.

1. நறவு – கள்; வரைந்தார் – வெறுத்த தேவர், வரையார் – விரும்பிய அரக்கர்; 2. அந்தணர் இருவர் – அமரர்க்கும், அரக்கர்க்கும் முறையே ஆசிரியர்களாய் வாழ்ந்த வியாழனும், வெள்ளியும்; 5. நல்ஊழி – நல்ல முறைமை; 6. செம்மையில் – நடுவு நிலைமை முதலாம் நல்ல குணங்களால்; 8. அறன் நிழல் – அறத்தைச் செய்யும் நிழல்; ஆய்குடை – அழகிய குடை; 9. காண்டிகா – காண்பாயாக; 10.. ஊர – பரவ; விதுப்பு – மனநடுக்கம்; 12. செங்கோலின் செய்தொழிற் கீழாவது; அச்செங்கோலுக்குப் புறம்பான கொடுங்கோலின் செயலாகிய கொடுமை; 13. கடைக்கூட்ட – இறுதிநாளைக் கொண்டு வந்து தர; 14. ஏமம் – பாதுகாவல்; இரங்கும் – ஒலிக்கும்; 15. இகந்தாள் – கடந்து அப்பாற்பட்டாள்; 16. உழப்பாள் – துன்புறுவாள்; 18. இகந்தவை – கடந்த பொருள்களை; 19. காணாதற்று – காணாத தன்மைத்துபோல்; 20. கொட்ப – கழன்று ஓட; 21. கடிது – கொடிய செயல்; கடிந்தது – அரசர்க்கு ஆகாதன என அறநூல்களால் விலக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/236&oldid=1130261" இலிருந்து மீள்விக்கப்பட்டது