பக்கம்:மருதநில மங்கை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4


எம்மையும் உள்ளுவாய்!


நீர் வளம் நிறைந்தது அந்நாடு. நகர்ப்புறங்களின் இயற்கைத் தோற்றம், அந்நகர் மக்களின் பண்பட்ட வாழ்க்கையின் வனப்பினை விளக்கிக் காட்டும் வளம் நிறைந்தது. புறநகரில் இருக்கும் பொய்கையில், அல்லியும், தாமரையும் மலர்ந்து மணம் வீசும், கரையில் நிழல்தரு மரங்கள் வளர்ந்துள்ளமையால், பொய்கை நீர் தண்ணெனக் குளிர்ந்திருக்கும். அழகிய மெல்லிய வெண்ணிற இறகுகள் வாய்ந்த அன்னங்கள் வாழும் வனப்புடையது அப் பொய்கை அன்னங்கள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இணைந்து, ஆங்கு மலர்ந்து கிடக்கும் தாமரை மலர்களைச் சுற்றிச் சுற்றித் திரியும் காட்சி, காண்பார் கண்ணிற்குப் பெருவிருந்தாம். அக் காட்சி மனம்நிறை மகிழ்ச்சி தரும் மணநாளன்று, நாண் மிகுதியால், தாம் அணிந்துள்ள புதுமண ஆடையால் தம் முகத்தை மறைத்துக் கொண்டு நோக்கும், அழகிய மான்விழி போலும் மருண்ட நோக்கினை உடைய உயர்குல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/29&oldid=1129432" இலிருந்து மீள்விக்கப்பட்டது