பக்கம்:மருதநில மங்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26புலவர் கா. கோவிந்தன்


சேரிபால் சென்று நீசேர்ந்த இல் வினாயினன்
தேரொடு திரிதரும் பாகனைப்பழிப் பேமோ?
ஒலிகொண்ட சும்மையான் மணமனை குறித்து எம்இல்
பொலிக எனப்புகுந்த நின்புலையனைக் கண்டயாம்,

என வாங்கு, 20
நனவினான் வேறாகும் வேளா முயக்கம்
மனைவரின் பெற்றுஉவந்து, மற்று எம்தோள்வாட,
இனையர்என உணர்ந்தார் என்று ஏக்கற் றாங்குக்
கனவினான் எய்திய செல்வத்து அனையதே,
ஐய! எமக்கு நின்மார்பு.” 25

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனுக்கு, ஊடல் தீர்ந்து வாயில் நேரும் தலைவி கூறியது இது.

1. பொதுமொழி-உலகம் அனைவர்க்கும் பொது என்ற சொல்; மதிமொழி-அறிவுரை, இடன்மாலை-உரைக்கும் இயல்புடைய; வினைவர்-அமைச்சர்; 3. செதுமொழி-பொல்லாத சொற்கள்; சீத்த-களையப்பட்ட; செறு-வயல்; 4. புலன்நா உழவர்-அறிவு நிறைந்த நாக்கை ஏராகக் கொண்டு உழும் புலவர்; 5. கூட்டுண்ணும்-பெரும் அளவில் பெற்று மகிழும்;6. உரன் அல்லன்-உறுதியுடையானல்லன்; வாளாது-ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறை கூறி; 7. நேராகி-ஒப்பாகி; 8. களையா-கூறிய குறைகளைக் களைந்து; கதவம்-கதவு; 9. வளையின் வாய் விடல்மாலை-வளை யொலியால் தம் வரவு அறிவிக்கும் இயல்புடைய; 11. வாடு-கெடு கின்ற;12. ஒடிஎறிந்து-இடையன் வெட்டிய மரம் போலாகி; 13. மால்-துன்பம்; சொல்-பழி; 14. குழைந்த-அழிந்த; தார்-மாலை; எள்ள-நகைக்க; 15. வகைவரிச் செப்பு-அழகிய வரிகள் அமைந்த செப்புக் கலம்; 16. சேரியால்-சேரிதோறும்; 18. ஒலி கொண்ட சும்மையான்-ஆரவாரப் பேரொலியால்; 19. பொலிக-பொலிக என வாழ்த்தல்; புலையன்-பாணன்ர; 21. வேளா முயக்கம்-விருப்பமில்லாத புணர்ச்சி; 23. இணைய-இத்தன்மையர்;ஏக்கற்று-மனம் நொந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/28&oldid=1129430" இலிருந்து மீள்விக்கப்பட்டது