பக்கம்:மருதநில மங்கை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மருதநில மங்கை49
 

மீண்டும் எழவே, அம்மலர்ச்சி அகன்றது. கவலைகொண்டு கண்ணிர் சிந்தினாள். இவ்வாறு நாட் பலவும் வருந்திக் கிடந்தாள்.

ஒரு நாள் காலை, தன் மனத் துயர் மறையுமாறு, ஊர்ப்புறத்தே சென்று உலாவிக் கொண்டிருந்தாள். ஆங்கே ஒரு பொய்கை, அல்லியும் தாமரையும் பின்னிப் படர்ந்திருந்தன. கரையில், நீரில் படுமாறு தாழ்ந்த கிளைகளைக் கொண்ட மாமரங்கள் நெருங்க வளர்ந்திருந்தன. அக் காட்சிகளை அகம் குளிரக் கண்டு களித்திருந்தாள். அந்நிலையில், ஒரு பெரிய அலை வீச, அது மோதியதால் அற்று வீழ்ந்த ஒரு மாவடு, பொய்கையில் மலர்ந்து கிடந்த ஒர் அல்லி மலரில் பட்டு, அருகில் இருந்த தாமரை அரும்பைத் தாக்கிற்று. வண்டு வந்து மொய்க்க மலர வேண்டிய அத் தாமரை அரும்பு, அவ்வடுப்பட்டு மலர்ந்தது. அந்நிகழ்ச்சி, அவளுக்கு அவள் நிலையை உணர்த்தி விட்டது. கணவனைக் கண்டு மலர வேண்டிய தன் முகம், கிளிகள் உணவுண்ணக் கண்டு மலரும் தன் நிலையை நினைவூட்ட உணர்ந்து வருந்தி வீடடைந்தாள்.

ஆங்கு, அவன் வாராமுன்பே வந்து, அவளை எதிர் நோக்கி நிற்கும் கணவனைக் கண்டாள். அவன் தோற்றம் சிறிதே மாறுபட்டிருப்பதை உணர்ந்து ஊன்றி நோக்கினாள். தம்மை மறந்து போவதால், தமக்கு இன்பம் தந்திலன் எனும் நினைவால், அவன், தம்மை என்றும் மறவாதிருக்கப் பண்ணும் குறியாக, அவன் மேனியைத் தம் நகங்களால் கீறி வடுச் செய்தார் சில பரத்தையர். அதைக் கண்ட வேறு சில பரத்தையர், அவனைப் புணர்ந்த காலத்தில், முத்தம் கொண்டாராக, அவர்

மருதம்-4