பக்கம்:மருதநில மங்கை.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78புலவர் கா. கோவிந்தன்
 

அந்நிலை யுற்றும், அவள் ஒருவாறு உயிர் தாங்கி யிருந்தாள். ஆனால், அந்தோ! அவ்வூரார் அவளை வாள்ா விடவில்லை, அவர்கள், அவளைக் காணும் போதெல்லாம், “அதோ போகும் அவள், பரத்தை வீடு சென்று வாழும் அக்கொடியோன் மனைவி!” எனச் சுட்டிக் கூறத் தொடங்கினர். அப்பழிச் சொல்லைப் பலமுறை கேட்டு வருந்தினாள். அதைக் கேட்டு வருந்தி வாழ்வதினும், உயிர் விட்டு அழிதல் நன்று என நினைத்தது அவள் நல்ல உள்ளம். அம்மட்டோ! கணவனால் முதலில் காதலிக்கப் பெற்றுப் பின்னர்க் கைவிடப் பெற்ற பரத்தையர், அவள்பால் வந்து, அவள் கணவன் செய்யும் கொடுமை களைக் கூறிக் கண்ணிர் விட்டனர். "கணவன் என்னை அழ விடுவதோடு அமையாது, ஊர்ப் பெண்களையும் அழ விடுகின்றனனே. அவர்கள் சிந்தை நொந்து சிந்தும் கண்ணிரால், அவனுக்கும், அவனோடு உறவு கொண்ட எனக்கும் என்னென்ன கேடுகள் வந்து வாய்க்குமோ!' என எண்ணிக் கலங்கினாள். அவள் கவலையின் எல்லை அத்துடன் முடிவுற்றிலது. கணவன், அவன் விரும்பும் அழகிகளைத் தேர்ந்து தந்து துணை புரியும் பாணனும், அறியாத பரத்தை வீடு சென்று வாழ, அப்பாணன், அவனைத் தான் அறிந்த இடங்களில் தேடியும் காணாமை யால், கலங்கி, இறுதியில், அவன் அவன் வீட்டிற்குச் சென்றிருப்பான் எனும் நினைவால், அங்கு வந்து, அங்கு வருந்தியிருக்கும் அவள்பால், "அம்மையே! அவன் எங்கே? அவன் சென்ற இடம் எது?” என்று கேட்டுச் சென்றான். காணவும் வெறுக்கும் அப்பாணன், தன் மனைக்கே வந்து, தன் கணவன் சென்ற பரத்தை வீடு எது எனத் தன்னையே கேட்பதைக் கண்டு கலங்கிக் கண்ணிர்