பக்கம்:மருதநில மங்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை97


உய்வின்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச்சா அய்மார்
எவ்வநோய் யாம்காணுங் கால்.

ஐய! திங்கட் குழவி! வருக! என யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது, மற்று இன்னாதே,
நல்காது, நுந்தை புறமாறப் பட்டவர் 20
அல்குல்வரி யாம்காணுங் கால்.

ஐய! எம்காதில் கணங்குழை வாங்கிப் பெயர்தொறும்,
போதுஇல் வறுங்கூந்தல் கொள்வதை, நின்னையான்,
ஏதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய 25
கோதை பரிபுஆடக் காண்கும்.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத் தானாகத் தலைவி மகனுக்கு உரைப்பாள்போல், தலைவன் கொடுமை கூறி வாயில் மறுத்தது இது.

1. நயம்–அன்பு, தலைமாறுவார்–கைவிடுவார்; 2. கயம்–மென்மை; முக்காழ்–மூன்றுவடம்; 4. தைஇ–அழுத்தி; 5. பருதி–வட்டமாகப் பண்ணிய பலகை; 6. கவழம் அறியா– உணவு உண்ண மாட்டாத; கைபுனை வேழம்–யானைப் பொம்மை; 7. புரிபுனை–முறுக்கிப் பண்ணிய, பூங்கயிறு–மெல்லிய கயிறு; வாங்கி–இழுத்து, 8. அரி–சிலம்பினுள் இடும் சிறுசிறு கற்கள்; புட்டில்–கெச்சை; 9. பாகமகன்–பாகனாகிய மகன்; 10. கிளர்–ஒளிவீசும், சாஅய்–சாய்ந்து; 12. உளம்என்னா–எங்கள் உள்ளம் என்று, கூறி, எவ்வம் உழப்பார்–துன்பம் அடைவார்; 13. வளைநெகிழ்பு–வளைகள் நெகிழ்தலை; 14. காமரு–அழகு நிறைந்த; 16. சாஅய்ச் சாஅய்மார்–நொந்து தளர்வார்; 19. அம்புலி–திங்கள்; 20. புறம்மாற–வெறுக்க; 23. போதுஇல்–மலர் சூட்டப்படாத, கொள்வதை–கொள்வது; 25. தைஇய–கட்டிய, 36. பரிபு–அறுத்து, ஆட–விளையாட.

மருதம்–7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/99&oldid=1129890" இலிருந்து மீள்விக்கப்பட்டது