பக்கம்:மருதாணி நகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் # 1 9

பஞ்சவர்ணத்து பேரிலே இருக்கிற மாகையும் வேப்பிலை அடிச்சதாட்டம் சமந்தரையாகிப்பூடும். ஆத்தாதான் கடைக்கண்ணு தொறக்கணும் !

அம்மன் கோயில் ஊருணியில் மீன்பிடிப்பு நடக்கும் பொழுது, கரைகட்டி, திட்டுகட்டி, லேஞ்சுவிரித்து, அதில் 'நரிப்பிரி வைத்துப் பிடித்த மீன்களைக் கொட்டினல், அவை ஒவ்வொன்றும் முரண்டு பிடித்துச் சீண்டிருவம் செய்தபடி துள்ளித்துள்ளிக் குதித்து விழும் ஜாடையில், வயது வந்த கிழவியின் நினைவுகள் அமைந்திருந்தன.

சீரங்கத்துக்குச் சுய உடம்பு வந்தபோது, பஞ்சவர் ணம் சுய உணர்வை இழந்து விட்டிருந்தாள்.

வாழ்ந்தவளின் கூர்ப்புப் பார்வைவாழவேண்டியவளை பிறி கட்டி அணைத்தது. பஞ்சவர்ணம் ஆடினுல்தானே? அசைந்தால்தானே ? அவளுடைய பூங் க ர ங் க ள் வெற்றிலைபாக்குத் தட்டுக்களை ஏந்தியது ஏந்தியபடியே இருந்தன.

நீராணிக்கம் முடிந்ததும், உழைப்பாளி ஓய்வு கொள்ளும் நேரம் கழிந்திருக்கும்.

தூண்டிவிடப்பட்டிருந்த அரிக்கன் விளக்கின் ஒளி, பஞ்சவர்ணத்தின் கனவுகளைத் துரண்டிவிட்டதோ என் னவோ? கெட்ட களு கண்டு திகைத்துத் தடும்ாறித்திசை கெட்டு விழிப்பதற்கு அனுசரணையாக, அவள் திகைப் பூண்டை மிதித்தவளாகத் தட்டுத் தடுமாறிள்ை. முக மெங்கும் வேர்வை. கச்சைப்பக்கம் நனைந்துவிட்டது.

பஞ்சவர்ணம் கிழவியைப் பார்த்தாள்.

முதியவள், இளையவளை நோக்கிள்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/121&oldid=612026" இலிருந்து மீள்விக்கப்பட்டது