பக்கம்:மருதாணி நகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பசித்திரம்

கங்காணி காத்தமுத்துச் சேர்வைக்காரருக்கு வாழ்க் கைப்பட்டு, முந்தானை விரித்த சீரங்கம், அந்த நிகழ்ச்சிக் கனவை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டு, அந்தப் பெருமையிலேயே, காலத்தையும், காலன் கொண்டு சென்ற தன் கணவரையும் பற்றிய நினைப்பை மறந்து, சிவனே' என்றுவாடிக்காட்டு மோர்க்காரி சுவரில் கரிக் கோடு கிழித்து நாட்களைக் கணக்கிட்டுச் சொல்வதைப் போன்று,அவளும் எஞ்சியிருக்கும்தன்னுடையமிச்சம்மீதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், இப்படிப்பட்டதொரு சுபச் சடங்குக்கு தான் துணிகாரம் பூண்டு வந்ததானது அவளுக்கே அதிசயமாக இருந்தது: அதேமாதிரி, அவதியாக்வும் இருந்தது.

கட்டுக்கழுத்திதான் பொண்ணு கேக்கப்போகை யிலே வெத்தலை பாக்குத் தட்டுக்களைக் கொண்டாரது ஊரு வளமை. அதுப்படி செய்யிறத்துக்குத்தான் நானும் ரோசிச்சிருந்தேன். அதுக்காவத்தான், எங்க கோவிந் தம்மாவையும் ஒரு குரல் கூப்பிட்டேன். ஆளுக்க, எம் மவன் என்னையேதான் தட்டுக்களை சாடாவும் தூக்கி யாரச் சொல்லிப்புட்டான். அழிஞ்ச நெத்திப் பொட்டு மேலே அவனுக்கு நம்பிக்கை அத்துப் போளுக்கக்கூட. அழியாத எம்பிட்டுப் பாசத்துமேலே எம்புள்ளைக்கு அசலான நம்பிக்கை இருக்குது. அதுமட்டும் நல்லது தான். ஊம் சரி!... வந்த காரியம் கை கூடி வந்துப் பிடுச்சின்னுக்க, அப்பாலே, எங்கட்டையும் வரிசாக் காட் டிலே வெந்துப்பிடும். எம் மகனை மகனுக்கும் இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/120&oldid=612025" இலிருந்து மீள்விக்கப்பட்டது