பக்கம்:மருதாணி நகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 12 |

ருந்தாற் போன்று கம்மென்று இருந்துவிட்டு, இப் பொழுது வந்து கதை படிக்கக் கேட்டதும், பஞ்சவர்ணத் துக்குத் திக்கும் புரியவில்லை ; திசையும் புரியவில்லை. கையில் ஏறியிருந்த தட்டுகள் நெஞ்சில் பளுவை ஏற்றின கண்களில் பட்ட ரூபாய்த் தாள்கள் கருத்தில் சுட்டன.

ஒன்றைக் கண்டாள் ஒன்றை எண்ணினுள். இந்தா தங்கச்சி பத்து ருவாக்காசு இருக்குது. உம்புட்டு மூக்குடி மச்சான்காரர் எம் மூலமாக் குடுத்துவுட்டுச்சு!’ என்று கட்டி வெல்லப்பாகுச் சேதியை ஒட்டி வைத்துச் செப்பிச் சென்ற நாகுடிச் சாமியாடியைப் பற்றின ஞாபகம் அவளைப் போர்த்தியது. தட்சணமே, அவளுக்கு மெய்ச்சிலிர்ப்பு உண்டாயிற்று.

'அயித்தைகாரங்களே !”

“என்னு மருமகப் பொண்ணே மவராசி!”

"சொந்தம் அப்பாலே குந்தட்டும். இப்ப வெசயத் துக்கு வருவமா ?”

"சொந்தம் குந்தியிருக்கிறதாலதானே இப்ப நானு விசயம் பேசிக்கிட காத்திருக்குறேன் !"

“வந்து...”

"இந்தாப்பாருலே!... போயி அல்லாத்தையும் உள் ளாற எடுத்து வச்சுப்புட்டு வந்து, எங்கிட்ட கொட்டுக் கடையை எடுத்து நீட்டி துண்ணறு வாங்கிப் பூசிக்கிட்டு, அப்பறம் ஆயிர ருவாப் பணத்தை எடுத்து அஞ்சறைப் பொட்டியிலே போட்டு முடிப்புட்டு ஓடியா. ரவ்வைக்கு எங்கவூட்டிலே தான் ஒனக்கு விருந்துச் சாப்பாடு மோக்களாவா ஆக்கி வச்சிருக்கேன்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/123&oldid=612028" இலிருந்து மீள்விக்கப்பட்டது