பக்கம்:மருதாணி நகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 மருதாணி நகம்

数致

"அயித்தை !

"சொல்லு, தாயி!”

" நானு ஒங்க ஆட்டுக்கு மருமகளா வரவேணுமின்னு ஒருகாலத்திலே சொப்பனம் வளர்த்தது மெய்தான். பொய் சொல்லநாக்கு மடங்காது. ஆளு, இப்பநடப்பு தடம் மாறிப் போச்சு. ஓங்க சுருட்டை முடிக்கார ராசா ஒரு காலத்திலே என்னை நேத்திர மாட்டம் நேசிச்சு, எம்மேலே இச்சை வச்சு நடந்திச்சு, ஆன, கெட்டதுங்க சவகாசத்திலே அதுக்குப் புத்தி மாறிப்போச்சு. மனசு மாறுறவுங்களை கட்டிக்கிட வேணும்னு எனக்கும் மனசு மாறிப்புடுச்சு. இப்ப எனக்கு ஊரு, உலகம், சாமி, சனம் சத்தியம், தண்ணி அல்லாமே எங்க மூக்குடிக்கார தான். ஐப்பசீலே கண்ணுலம். இந்தாப்பாருங்க, அவுக குடுத் தனுப்பிச்ச இந்தக் கொஞ்சப் பனந்தான், ஒங்க அம்மாம் பணத்தைக் காட்டி ஒப்பனையாவும் ஒ ச ந் த த வு ம் உள்ளாசை கொண்டதாகவும் எனக்கு மட்டுப்பட்டு நிக்குது. என்னைச் சமிச்சுப்புட்டு, நீங்க போயிடுங்க. அவுங்க அவுங்க லவிதப்படி தானுங்களே கண்ணுலம் கார்த்திகை அல்லாம் நடந்து முடிய வாய்க்கும் ? ...”

படைப்பு விதிக்குப் போட்டியிடும் கலைஞன் கல்லுக்கு உயிர் ஊட்டுகிருன். ஆனால், படைப்பின் தந்தையாக, பனிதுங்கும் வரை விளிம்பில் வீற்றிருந்து விளையாடும் ஆண்டானின் சக்தியினுல் உயிர் கொண்டிலங்கிய கங்காணி சம்சாரத்துக்கு உயிர்ப்பு இற்று விட்டதாகவே தோன்றிற்று. எடுத்த எடுப்பில், அவளுடைய குழி விழுந்த கண்பார்வை வாசற்புறம் ஓடியதா? ஓடமுடியுமா? தத்தித்தத்தி நடந்தது. எங்கே தம்பி முத்தையனைக் காணலே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/124&oldid=612029" இலிருந்து மீள்விக்கப்பட்டது