பக்கம்:மருதாணி நகம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் † 25

முத்தையன் குரோதம் மங்காத பேய்ச் சிரிப்புடன், 'இந்தாப்பாரு பஞ்சவர்ணம் உன் பசப்புப் பேச்சுக் கெல்லாம் இனியும் இந்த முத்தையன் மசியமாட்டான். நாளைக்குப் பொழுது படுறதுக்குள்ள, எம்புட்டு பொருளுக முச்சூடும் எங்கைக்கு வந்து சேரவேணும். இல்லாங் காட்டி, எனக்கிண்ணு ஊர்ப்பஞ்சாயத்துக் கூட்டின ஒனக்கும் நாளைக்கு ஊருப் பஞ்சாயத்தைக் கூட்டாமப் பாயிலே தலை சாயமாட்டேனுக்கும்! நெனப்பு வச்சுக்கிடு ஆமா!” என்று தீர்க்கமான குரலில் பொரிந்து தள்ளி விட்டு, ஐயனர் குதிரையின் சவாலுடன் பறந்தான். விரைவு பாய்ச்சிப் பறந்தவனுடன் அவனது கைவிரல் நகங்களில் தெளித்துக் கிடந்த மருதாணிச் சிவப்பும் பறந்துவிடவில்லே! அந்தச் செம்மை பஞ்சவர்ணத்தின் நெஞ்சில் ஒதுங்கியதோ?

முத்தையனுக்கு ஆத்திரம் வழிகாட்டியது.

சீரங்கத்திற்கு அழுகை வழியை மறைத்தது.

அலஞ்சிரான் காட்டுப் பேய்க்கணமாக இருட்டு உரும, அந்த உருமலில் மனம் தாளாமல், மெய் தாளா மல் நரகவேதனைப் பட்டுக் கொண்டிருந்தாள் பஞ்சவர் ணம். எனக்கு எம் மச்சான் இருக்கையிலே, எந்தப்பய எப்படிப் பய முறுத்தின, எனக்கென்னவாம்?... ப்யூ!.. துர்வே...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/127&oldid=612032" இலிருந்து மீள்விக்கப்பட்டது