பக்கம்:மருதாணி நகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 மருதாணி நகம்

சகலத்தனை ஆளுங்களையும் சமாளிச்சுக்கினு வந்திருக்க முடிஞ்சிருக்குமா?... அந்த நாளையிலே நீங்க என்மேலே நேசம் வச்சிங்க. நானும் ஒங்களை மனசொப்பி விரும்பி னேன். இதுக்காக எம்புட்டு அசல்முறை மச்சான்... அதான் அவுக வீரப்பனைக் கூட முறிச்சுக்கிட்டேன். எனக்குத் துணிமணி, நகைநட்டு எல்லாம் கமுக்கமாகத் தந்தீங்க. அல்லாம் சரி. ஆளுக்க நீங்க கூடாதவுங்க ளோடகூடி தப்புத் தண்டாச் செய்யிற விவரத்தைப் புரிஞ்சிட்டடியும்தான், என் மனசிலேருந்து ஒங்களைத் தள்ளினேன். அப்ப ஊத்த ஆரம்பிச்ச கண்ணிர்த் தண்ணி இன்னமும் நிக்கலை! ஆன, நீங்க எனக்கு வாங்கித் தந்த சாமானுங்களை வச்சுக்கிட்டு சூதுக் காயாக்கி, பொண்ணுப் பொறந்தவளைப் பத்தி இல்லா ததும் பொல்லாததும் பேசவும் செஞ்சீங்க. அதுக்காகத் தான், நீங்க ஈவிரக்கமில்லாம எம்பிட்டு சோளக் கொல்லப் ப்ொம்மையிலே நெருப்பு வச்சப்ப நீங்க தந்தது அத்தனையையும், அந்தத் தீக்கணப்புக்குள்ளே போட்டுப் பொசுக்கிப்புட்டேன். ஆளு, நான் தப்பிச்சுக் கிட்ட மாதிரி, என்னுேட நல்ல மனசும் தப்பிச்சுது. அதாலேதான், அன்னிக்கு ஒரு நாளைக்கு நீங்க கிணத்திலே விழுந்து செத்துப் பூட்டதாத் தகவல் விழுந் ததும், கைகாலு பதற ஒட்டமா ஓடியாந்தேன் ஒங்களைத் தேடி. சாமி புண்ணியத்திலே நீங்க உயிர் பொழைச் சுக்கினு இருந்தீங்க. எனக்கு மனசு கொள்ளாச் சந்தோசம் திரும்பிச்சு. நானும் திரும்பிட்டேன். ஆளு,ை ஒண்னு நீங்க தந்த துணிமணி நகை நட்டு அம்புட்டை யும் திரும்பி வாங்கி, பொறக்கு மாசம் நானே ஓங்க வீடுதேடிக் கொண்டாந்து தாரேனுங்க.."

சுண்டும் விரல் சுடு திவலைகளைச் சுண்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/126&oldid=612031" இலிருந்து மீள்விக்கப்பட்டது