பக்கம்:மருதாணி நகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 127

மச்சானை ஒட்டி எம் மேலே சம்சயம் விளுந்துகிடக்குது. இப்ப வேறே வம்பே வேண்டாம். அனல் சட்டிக்கு ஆடிக் காத்து சேடை கூட்டினப்பிலே ஆயிப்பிடும். அப்பாலே வளவிக்காரப் பெரிய ஐயா இருக்காக, அவுககிட்ட எனக்குத் தேவைப் படுறமட்டுக்கு பணம் மிதந்தா கிடக் கப் போவுது ? பாவம், வயத்துப்பசி வாயைவிட்டு வரப் பிடாதின்னு பேசுறவுங்களாச்சே! அத்தோடே, அவுக ஒடப்பொறந்தா மகன் வேறே விருந்துக்கு வந்திருக் குது. இப்ப செலவும் உண்டன ஆகும். ஆக, கூட்டு மொத்தமாப் பார்த்தாக்க, மணியக்கார ஐயா ஒர்த்தர்தான் என் கலிதீர்க்க வாய்ச்சிருக்கிற சாமியாட்டம் இருக்காரு. அவுகளுக்கு நூறு ருவாக்காசு ஒத்தக்கடை கூந்தப்பனை உண்டியிலே போடுற சல்லிக்காசுக்கு ஒப்புத்தான். மிதந்த கை, ஆளுக்க, மேலுக்குத் தெரியுமா ? ஊக்கும் ! தெரியவே தெரியாது. எனக்கு வாக்குக் குடுத்திருக்கிற கடவுளரு அவுக. அவுங்களைக் கண்டு தண்டிக்கிட்டு வந்தாத்தான், இன்னைக்கு எம்மானமும் மருவாதையும் கப்பல் ஏருமத் தங்கும் இல்லாங்காட்டி...!"

கேள்வி அரைகுறையாகவே நின்று விட்டது. ஆளுல் வெடித்து வடித்த சுடுநீர்ச்சரம் மண்ணில் மாலையாக நீண்டது. நடக்கக்கூாத ஒன்றை-அல்லது, நடந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையைப் பற்றிய முடிவை முடித்துப் பார்க்க விழையாத ஒன்றை யார்தான் அலங் காரம் செய்து பார்க்கச் சம்மதிப்பார்கள்? இல்லாங்காட்டி என்ற விளுச் சுழிப்பில், இல்லாங்காட்டி நானு அந்த முத்தையன் ம ச் சா ன் கா ர ர் கதையாக் கொல்லைக் கிணத்திலே விழுந்து செத்து மடிஞ்சு சிவலோகம் போயிற வேண்டியதுதான் ! என்ற விடை யின் தவிப்பு மிதந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/129&oldid=612034" இலிருந்து மீள்விக்கப்பட்டது