பக்கம்:மருதாணி நகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மருதாணி நகம்

அதே மின்வெட்டில், அவளை வேருெரு வேண்டாத கவலையும் பீடித்தது. அல்லாஞ்சரி அந்த முத்தையன் ...ப்பூ! பேரை சொல்லிக்கிட்டா என்ன குடியா முழுகிப் பூடும்!...அந்த மச்சான் ராசா எதுக்கு கொல்லைக் கிணத் திலே குதிச்சாராம்? அண்ணைக்கு அதாலேதான் ஊருப் பஞ்சாயத்தைத் தள்ளி வச்சாக. அந்தப் பஞ்சாயத்து அந்தமட்டோட சரின்னு நினைச்சுப் புட்டாரோ, என்ன கதையோ ?...வரட்டும், வரட்டும்? என்னைச் சோதிக்கிற இந்த ஆம்பளையை நானும் சோதிக்காமயா தப்ப விடு வேன் ?-மறுமுறை அவள் சிந்தனை வசப்பட்டாள். கூர் இருளில் அகப்பட்டதற் கிணங்க, அவளுள்ளே பயங்கர மானதொரு தவிப்பும், கூர்முள் முனையில் குதிகாலைத் தஞ்சம் புகச் செய்த வடிவில் தாளமுடியாத சடனையும் வேதனையும் கிளர்ந்தெழ, பஞ்சவர்ணம் தன்னுடைய சாயாக்கடையை விருந்தாடி போய் மீண்டிருந்த சிறுமி சின்னத்தாளிடம் ஒப்படைத்துவிட்டு, படி இறங்கி நடந் தாள். விழி பார்த்து, வழி மிதித்து, மறுகியும் மாறியும் நடந்தாள் அவள். விட்டகதை தொடர்வது உண்டு. அதற்கு இசைவாக, அங்கு - குணபுலத் திட்டில் நின்ற மருதாணிச் செடி அவளைத் தடுத்தது. ஆளுல் தடுத்தாட் கொண்டதா? அன்றைக்கு இதே தடத்தில் தடம் பார்த்து வழி கடந்த பொழுது, பாங்கி கோவிந்தம்மா தன் கையில் ஆட்டியபடி காட்டிய மருதாணித் தழையின் கதையை இப்பொழுது நினைத்துக் கொண்டாள். "ஆமாடி, பஞ்ச வர்ணம்! நீ எப்பிடியடி இந்த மருதாணியை மறக்க ஏலும் ? ஒரு தக்கம் நான் அரைச்சுக் குழைச்சுத் தந்த மருதாணியை நீ லபக்கினு எங்க மு த் ைத ய ன் அண்ணுச்சி கைவிரலிலே பூசப் போயி, அதை ஒண்டி யிருந்து கண்டு நானு சிரிச்ச சங்கதி எனக்கு இன்னம் நெனப்பிலே தங்கியிருக்குதே! இன்னெண்ணு இப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/130&oldid=612035" இலிருந்து மீள்விக்கப்பட்டது