பக்கம்:மருதாணி நகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 129

நெஞ்சுக்குப் பாடம் சொல்லுது. ஒரு நாளு நீ மெய்ப் பனைக்கு கோவக்காரியாட்டம் பாவலா செய்யப்போக, எங்க முத்தையன் அண்ணுச்சி அது கையோட கொண் டாந்த மருதாணிச் சரக்கை உங்கை நகத்திலே பூசி விட்டு அழகு பார்த்திச்சுதே அதைத்தான் உன்னலே அம்மாம் லகுவிலே நெஞ்சை விட்டோ, நினைப்பை விட்டோ ஒட்டிப்பிட வாய்க்குமா ? என்னமோ, உங்க ரெண்டுபேர் கதையும் காரணமும் அதிசயக் கூத்தாத் தான் இருக்குது?" என்று சொல்லாமல் சொல்லி, செல்லாமல் சென்றுவிட்டாளே, குறும்புக்காரி கோவிந் தம்மா ? வார்த்தையாடும் பொழுதில் அவள் நயனங்கள் எப்படி எப்படியெல்லாம் லயம் மாருமல், மு. த் தி ைர காட்டின !

பஞ்சவர்ணத்திற்கு இதயம் கலங்கி வந்தது. போலவே, விழிகளும் கலங்கி வந்தன. கருத்தில் ஒருவன் விளையாட, கண்ணில் ஒருவன் விளையாடினன். அன்பில் ஒருவன் ஆண்டாகை நிற்க,ஆசையில்ஒருவன் அடிமை யாக உருக்காட்டி நின்ருன் இருந்திருந்தாற்போல, அவளுக்கு இப்பொழுது புதிய ஐயப்பாடு தோன்றலா யிற்று. ஆமா ; எனக்கு அந்த மச்சான் ஒசத்தியா ? இல்லே, இவருதான் தரமானவரா?' என்று குழம்பி ள்ை. ஆத்தாளைக் கூப்பிட்டாள். நெஞ்சு வெடிக்க, ஒடிந்த ஒதிய மரத்தடியில் எச்சில் துப்பிக் காயும் வரை நின்ருள். இராம தூதனுக்காவது சீதாப் பிராட்டியிடம், தான் இராமதுரதன் என்பதை மெய்ப்பித்துக் காட்டி, அதற்குத் தோதாக உருக்காட்டிக் கொள்ளவும் முடிந் தது! ஆனல் பஞ்சவர்ணத்தின் முன் முத்தையனே. கோலப்பனே உருக்காட்டுப் படலம் நிகழ்த்த, விதி வந்ததா? வினை வந்ததா?

நடந்தாள் பஞ்சவர்ணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/131&oldid=612036" இலிருந்து மீள்விக்கப்பட்டது